இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பிற நன்மைகளைப் பெற டிஜிட்டல் அடையாளச் சான்றாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை தேவைப்பட்டால், ஆதார் இல்லை என்றால், இப்போது கவலைப்படத் தேவையில்லை. UIDAI (Unique Identification Authority of India) அட்டைதாரர்களுக்கு ஆன்லைனில் ஆதார் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது.
மேலும் படிக்க | நெட்பிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... டாப் ஓடிடியின் விலை குறைவான பிளான்கள்!
இ-ஆதார் பெறுவது எப்படி?
ஆதார் எண் இருந்தால் போதும். இ-ஆதாரை UIDAI இணையதளம் அல்லது mAadhaar செயலியில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- UIDAI இணையதளத்திற்கு myaadhaar.uidai.gov.in/ செல்லவும்.
- 'ஆதாரைப் பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் 4 இலக்க OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
- OTP ஐ உள்ளிட்டு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் இ-ஆதார் PDF வடிவத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்
PVC ஆதார் அட்டையை எப்படி ஆர்டர் செய்வது?
இப்போது யார் வேண்டுமானாலும் தங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பிவிசி கார்டாக மாற்றிக்கொள்ளலாம். யுஐடிஏஐ இணையதளத்திற்குச் சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி PVC ஆதார் அட்டையை ஆர்டர் செய்யலாம். UIDAI இணையதளம் atuidai.gov.in/ க்குச் சென்று எனது ஆதார் லிங்கை கிளிக் செய்யவும். பின்னர் ஆர்டர் ஆதார் பிவிசி கார்டை கிளிக் செய்து ஆர்டர் செய்யவும்.
மேலும் படிக்க | Amazon Great Summer Sale 2024: 50-இன்ச் முதல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பலே ஆஃபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ