ரூ.12 ஆயிரத்துக்கு பக்கா 5ஜி மொபைல்; பேட்டரி, கேமரா எல்லாமே தரம்

வெறும் 12 ஆயிரம் ரூபாய் விலையில் கேமரா, பேட்டரி எல்லாமே தரமாக இருக்கும் 5ஜி மொபைல் விரைவில் வெளியாக உள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 23, 2022, 09:57 PM IST
ரூ.12 ஆயிரத்துக்கு பக்கா 5ஜி மொபைல்; பேட்டரி, கேமரா எல்லாமே தரம் title=

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் 5ஜி மொபைல் விரைவில் வெளியாக இருக்கிறது. மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த மொபைல் பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல் வாங்க நினைப்பவர்களுக்கு பெரும் வரப்பிரதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 20

இந்தியாவில் Infinix Hot 20 மொபைல் டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 5ஜி நெட்வொர்க் ஆதரவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே என பல மேம்பட்ட அம்சங்களின் ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு புத்தாண்டில் எக்கச்சக்க பரிசுகள்

பிளிப்கார்ட்டில் Infinix Hot 20 5G

இந்த ஸ்மார்ட்போனின் விலை, வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனானது 12 5ஜி பேண்டுகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே இந்த புதிய ஹாட் 20 5ஜி போனும் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக விற்பனைக்கு கிடைக்கும். Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனில் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்துடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படும். 

Infinix Hot 20 5G விலை 

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.12,000-க்குள் இருக்கலாம். நவம்பர் 24 ஆம் தேதி அதாவது நாளை இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Hot 20 5G ஆனது டிசம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.

Infinix Hot 20 5G சிறப்பம்சங்கள் 

Infinix Hot 20 5G மொபைலின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் கூடிய 6.6 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே இடம்பெறும். மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்கும், 5ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டி மற்றும் 12 பேண்ட் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

50 எம்பி பிரைமரி கேமரா 

Infinix Hot 20 5G மொபைலின் கேமராவை பொறுத்தவரை 50 எம்பி பிரைமரி கேமரா  இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி ஆதரவுடன் மலிவு விலையில் இந்த தரத்துடன் கேமரா வருகிது என்பது வரவேற்க கூடிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வீடியோ அழைப்புகளுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி ஷூட்டர் இடம்பெறும். மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக மெமரி விரிவாக்கம் செய்யலாம். 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும்.

மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட் ஏஜெண்டை ஓவர் டேக் செய்து டிக்கெட்டை கன்பார்ம் பண்ணுங்க! ஐஆர்சிடிசி டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News