iPhone 14 Series, தொடங்கியது முன்பதிவு: எங்கு வாங்கலாம், விலை என்ன? விவரம் இதோ

Apple iPhone 14 Pre-Booking: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! நேற்று மாலை முதல் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 10, 2022, 11:00 AM IST
  • ஐபோன் 14 தொடரின் முன்பதிவு தொடங்கியது.
  • ஐபோன் 14 தொடர்: விலை எவ்வளவு?
  • இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸின் விலை அமெரிக்க விலையிலிருந்து எவ்வளவு மாறுபட்டுள்ளாது?
iPhone 14 Series, தொடங்கியது முன்பதிவு: எங்கு வாங்கலாம், விலை என்ன? விவரம் இதோ  title=

ஆப்பிள் ஐபோன் 14 முன்பதிவு: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! நேற்று மாலை முதல் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போது வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்குவதற்கான அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளனர். முன்பதிவு செயல்முறை நேற்று மாலை 5:30 மணி முதல் தொடங்கியது. இருப்பினும் இந்த முன்பதிவில் iPhone 14, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகியவை மட்டுமே முன்பதிவுக்குக் கிடைக்கின்றன. iPhone 14 Plus மாடல் இந்தச் செயல்முறையில் இல்லை.

இந்த தளங்களில் முன்பதிவு செய்யலாம்

வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் ரிலயன்ஸ் டிஜிட்டல் போன்றவற்றிலிருந்து ஐபோன் 14 தொடரை முன்பதிவு செய்யலாம். இந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு இந்த போனை வாங்க அதிக அபஷன்கள் கிடைக்கின்றன. இவற்றில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்த விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | iphone தயாரிக்கும் முயற்சியில் டாடா குழுமம்... விஸ்ட்ரானுடன் பேச்சுவார்த்தை! 

ஐபோன் 14 தொடர்: விலை எவ்வளவு

ஐபோன் 14: ஐபோன் 14 இன் விலையைப் பற்றி பேசினால், வாடிக்கையாளர்கள் அதன் 128 ஜிபி வகைக்கு ரூ.79,900, 256 ஜிபி மாறுபாட்டிற்கு ரூ.89,900 மற்றும் 512 ஜிபி மாறுபாட்டிற்கு ரூ.1,09,900 செலுத்த வேண்டும்.

ஐபோன் 14 ப்ரோ: ஐபோன் 14 ப்ரோ பற்றி பேசுகையில், 128 ஜிபி வகைக்கு ரூ.1,29,900, 256 ஜிபி  மாறுபாட்டிற்கு ரூ.1,39,900, 512 ஜிபி மாறுபாட்டிற்கு ரூ.1,59,900 மற்றும் 1 டிபி வேரியண்ட்டுக்கு ரூ.1,79,900 செலுத்த வேண்டும்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்: ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் பற்றி பேசினால், வாடிக்கையாளர்கள் அதன் 128 ஜிபி வகைக்கு ரூ.1,39,900, 256 ஜிபி வகைக்கு ரூ.1,49,900, 512 ஜிபி மாறுபாட்டிற்கு ரூ.1,69,900 மற்றும் 1 டிபி மாறுபாட்டிற்கு ரூ.1,89,900 செலுத்த வேண்டும். 

இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸின் விலை அமெரிக்க விலையிலிருந்து எவ்வளவு மாறுபட்டுள்ளாது? 

அமெரிக்காவில் ஐபோன் 14 ப்ரோ: 999 டாலர்
இந்தியாவில் ஐபோன் 14 ப்ரோ: 1,631.59 டாலர்

அமெரிக்காவில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்: 1099 டாலர்
இந்தியாவில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்: 1,756.67 டாலர்

அமெரிக்காவில் ஐபோன் 14: 799 டாலர்
இந்தியாவில் ஐபோன் 14: 1,003.60 டாலர்

மேலும் படிக்க | Realme C30: பிளிப்கார்ட் ஆஃபரில் ரூ.549-க்கு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News