புதுடெல்லி: இந்தியாவில் விரிவான சட்டக் கட்டமைப்பின் ஓட்டைகளை பயன்படுத்தி பயனர்களின் தொலைபேசி எண், பதவி, நிறுவனத்தின் பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கமாகக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுகளை, அழைப்பாளர் ஐடி செயலியான ட்ரூகாலர் மறுத்துள்ளது.
WhatsApp மற்றும் பிற மெட்டாடேட்டாவில், பயனர்களின் அனுமதியின்றி அவர்களது விவரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று தி கேரவன் இதழில் வெளியான அறிக்கைக்கு பதிலளித்துள்ள Truecaller, அந்தக் கட்டுரையில் பல தவறுகள் இருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தரவுக் கசிவு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிறுவனம், அதன் பயனர்களின் அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், Truecaller பயனர்களின் தரவை விற்கவில்லை என்றும் கூறியது.
There are several inaccuracies in the article that we have highlighted. Truecaller has a robust privacy policy that protects user rights. We are subject to over 150 data regulation regimes and we are always committed to comply with local regulatorns. https://t.co/yF6wmjVu7m
— Truecaller (@Truecaller) March 11, 2022
"எங்கள் பயனர்கள் மற்றும் அவர்களின் தரவு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம், வாடிக்கையாளர்களின் தரவை நாங்கள் பாதுகாப்பாகக் கையாள்வோம், எங்கள் தனியுரிமைக் கொள்கையின்படி அதைச் செயல்படுத்துவோம் என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று Truecaller நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தி கேரவனில் உள்ள அறிக்கை, ட்ரூகாலர் மக்களின் முக்கியத் தரவை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பகிரங்கமாகக் காட்டுகிறது என்று கூறியது.
மேலும் படிக்க | குறைந்த செலவில் வாட்ஸ்அப் அழைப்பை செய்ய சுலபமான வழி
இதற்கு மறுப்பு தெரிவித்து ட்ரூ காலர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டாக்ஹோமை தளமாகக் கொண்ட நிறுவனம் கடுமையான பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைக் கொண்டுள்ளதாக கூறுகிறது.
"மில்லியன் கணக்கான மக்கள் மீது தொடர்ந்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த விஷயங்களை உருவாக்கி வருகிறோம்" என்று நிறுவனம் கூறியது.
ஆனால் கட்டுரையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை தெளிவுபடுத்த, கேரவனின் பத்திரிகையாளர், குறிப்பிட்ட ஒரு தொலைபேசி எண்ணை WhatsApp க்கு பயன்படுத்துகிறதா இல்லையா தெரிவித்துள்ளார்.
இது ஆண்ட்ராய்டு ஏபிஐ (Android API, Application Programming Index) என்று கூறும் நிறுவனம், இது பயனர் வசதிக்காக உள்ளது என்று விளக்கமளித்துள்ளது.
"மற்ற செயலிகளால் வாட்ஸ்அப்பில் அழைக்கவோ அல்லது திறக்கும்படி கோரவோ முடியும். பயனர் வாட்ஸ்அப்பில் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் பொத்தானைக் காட்டுகிறோம்" என்று Truecaller தெரிவித்துள்ளது.
மக்கள் பொதுவாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை அறிந்திருப்பதாகவும், அது வெறுமனே வாட்ஸ்அப்பைத் தொடங்க முயற்சிப்பதாகவும், உரையாடலைத் தொடங்கும் நிலைக்கு பயனரை இட்டுச் செல்வதாகவும் நிறுவனம் கூறியது.
மேலும், 300 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள தனது பயனர்களில், 220 மில்லியன் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையையும் நிறுவனம் தெளிவுபடுத்தியது. TrueCaller நிறுவனம் அதன் பயனர்களின் நிதி விவரங்களை உருவாக்கலாம் என்ற கூற்றுகளையும் நிராகரித்துள்ளது.
மேலும் படிக்க | வாய்ஸ் மூலம் கூகுள் பேவில் பேமண்ட்
தனியுரிமைப் பாதுகாப்பின் நிலை குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில், TrueCaller "பயனர் உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான தனியுரிமைக் கொள்கையைக் கொண்டுள்ளது" என்று கூறியது.
தி கேரவனில் வெளியான அறிக்கைக்கு டிரூ காலர் அளித்துள்ள தெளிவான பதிலில், மக்கள் தங்கள் தொழில்முறை அடையாளத்துடன் கூடிய தொலைபேசி எண் முழு உலகமும் பார்க்கும் வசதியை ட்ரூ காலர் கொடுக்கிறது என்பதை மறுத்தது. ட்ரூகாலரில் பெயரை உள்ளீடு செய்து எண்ணைப் பெற முடியாது என்பதால் இது உண்மையல்ல என்று நிறுவனம் கூறியது.
"நீங்கள் ஒரு எண்ணை மட்டுமே உள்ளீடு செய்து அந்த எண்ணுடன் தொடர்புடைய பெயரைப் பெறலாம். இது ஒரு ஸ்பேமர், மோசடி செய்பவர், துன்புறுத்துபவர் அல்லது நீங்கள் அழைப்புகளைப் பெற விரும்பும் ஒருவராகவும் இருக்கலாம்" என்று நிறுவனம் கூறியது.
மேலும் படிக்க | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR