Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே…

Itel ஸ்மார்ட்போன் ₹ 7000 பட்ஜெட்டில் கிடைக்கிறது தெரியுமா? சூரிய வெளிச்சத்தில் கூட போனை எளிதாகக் காணலாம். Itel Vision 1 PRO ஸ்மார்ட்போன் 7000 ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 16, 2021, 09:56 PM IST
  • 'New India Ka Vision' என்ற கருப்பொருளுடன் இந்த ஸ்மார்ட்போன் விஷன் 1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • 7000 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்
  • 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது
Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே… title=

புதுடெல்லி: Itel ஸ்மார்ட்போன் ₹ 7000 பட்ஜெட்டில் கிடைக்கிறது தெரியுமா? சூரிய வெளிச்சத்தில் கூட போனை எளிதாகக் காணலாம். Itel Vision 1 PRO ஸ்மார்ட்போன் 7000 ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், ஐடெல் தனது முதல் HD waterdrop display ஸ்மார்ட்போன் விஷன் 1 ஐ அறிமுகப்படுத்தியது.

புதுடெல்லி: குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்க நினைத்தால், ஐடெல் 7 ஆயிரம் பட்ஜெட்டில் ஒரு கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. விஷன் 1 புரோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொலைபேசியின் விலை ரூ .6599 ஆகும். இவ்வளவு குறைந்த விலையிலும் கூட, இந்த தொலைபேசியில் பல நல்ல அம்சங்களை வழங்கியுள்ளது.

இந்த தொலைபேசியில் 6.52 இன்ச் HD+ waterdrop display in-cell தொழில்நுட்பம் (Technology) கொண்டது. 2.5D Quad முழுமையாக லேமினேட் செய்யப்பட்டது. 450 நைட்ஸ் பிரகாசமாக உள்ளது, அதாவது அதன் திரையை வெளியில், சூரிய வெளிச்சத்திலும் நன்றாக பார்க்கலாம். சாதனத்தின் pixel resolution, 1600 X 720 என்பதால், இது வீடியோ பார்க்கும் அனுபவத்தை அற்புதமாகக் கொடுக்கும்.  

Also Read | Samsung Galaxy A31 விலை குறைந்தது! நம்ப முடியாத விலையில் உங்களுக்காக…

கேமரா
இந்த ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் AI டிரிபிள் கேமரா 8mp கேமரா (Camera) மற்றும் ஒளிரும் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதில் AI பியூட்டி Mode, Portrait Mode, பனோ Mode, புரோ Mode, லோ லைட் Mode மற்றும் எச்டிஆர் Mode ஆகியவை அடங்கும், இது ஒளி மற்றும் பொருளுக்கு ஏற்ப சிறந்த மற்றும் நேர்த்தியான படங்களை எடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த போனில் AI அழகு பயன்முறையுடன் 5 எம்.பி செல்பி கேமரா (5 MP selfie camera) பொருத்தப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் 'New India Ka Vision' என்ற கருப்பொருளுடன் இந்த ஸ்மார்ட்போன் விஷன் 1  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக Transan India  தலைமை நிர்வாக அதிகாரி அரிஜித் தல்பத்ரா கூறுகிறார்.     வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது, பல தனித்துவமான அம்சங்களை குறைந்த விலையில் வழங்கியிருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். இன்றைய காலகட்டத்தில், டிஜிட்டல் மயமாக்கலின் பங்கு மிகவும் முக்கியமானது மற்றும் நமது அன்றாட வழக்கத்திற்கு, ஸ்மார்ட்போன் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

Also Read | Smartphone வாங்கும் முன் இந்த அம்சத்தைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News