ஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை!!

ஜியோ போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் அப்ளிகேஷன்களை இனி பயன்படுத்த முடியும். ஜியோ போனில் வாட்ஸ் அப் மூலம் மற்றொரு ஜியோ போன் வாடிக்கையாளருக்கோ அல்லது மற்ற ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கோ செய்திகளை அனுப்ப முடியும்!!

Updated: Jul 5, 2018, 02:42 PM IST
ஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை!!
Pic Courtesy : ANI

ஜியோ போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் அப்ளிகேஷன்களை இனி பயன்படுத்த முடியும். ஜியோ போனில் வாட்ஸ் அப் மூலம் மற்றொரு ஜியோ போன் வாடிக்கையாளருக்கோ அல்லது மற்ற ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கோ செய்திகளை அனுப்ப முடியும்!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மும்பையில் உள்ள பிர்லா மதுஸ்ரீ சபஹர் அரங்கத்தில் நடைபெருகிறது. இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு - 1005.90 (+1.90) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு முகேஷ் அம்பானியின் தாய் கோகிலாபென் அம்பானியும் கலந்துகொண்டார். 

இந்தியாவிலேயே தனியார் துறையில் அதிக ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரிசெலுத்தும் நிறுவனம் ரிலையன்ஸ். ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 22 மாதத்துக்குள்ளேயே 21.5 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் இந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை எட்டியதில்லை. ஜியோ இந்தியாவின் மொபைல் வீடியோ நெட்வொர்க்காக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு எங்களது வாடிக்கையாளர்கள் 219 நிமிடங்களுக்கு அதிகமாக இணைந்துள்ளனர் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளனர். 

இதை தொடர்ந்து, ஜியோ சேவை இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தாலுகாவில் ஏன் ஒவ்வொரு கிராமத்திலும் பரவியுள்ளது என முகேஷ் அம்பானி கூறியுள்ளார். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து 21.5 கோடியாக உயர்ந்துள்ளது ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இணைய பயன்பாடு 125 கோடி ஜிபியிலிருந்து 240 ஜிபியாக அதிகரித்துள்ளது. 

மேலும், பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையில் இந்தியா இன்னமும் பின்தங்கி உள்ளது. பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையில் சர்வதேச அளவில் இந்தியாவை முதல் 5 இடங்களுக்குள் கொண்டுவருவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி எடுத்துள்ளது. பைபர் இணைய சேவையில் ரூ.2.5 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளோம். பைபர் பிராட்பேண்ட் சேவையை இனி ஜியோஜிகாபைபர் என அழைக்கப்படும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 20.6 சதவீதம் உயர்ந்துள்ளது என முகேஷ் அம்பானி கூறியுள்ளார். தனியார் துறையில் அதிக வருமான வரி செலுத்து குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என முகேஷ் அம்பானி பேச்சுரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு லாபம் 36,076 கோடி - முகேஷ் அம்பானி அறிவிப்பு. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதையொட்டி இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு உயர்வை கண்டு வருகிறது. 

* ஜியோஜிகாபைபர் சேவையை பெறுவதற்கு மைஜியோ மற்றும் ஜியோ.காம் மூலம் பதிவு செய்யலாம்.

* இந்தியாவில் 1,100 நகரங்களில் ஜியோஜிகாபைபர் சேவை தொடங்கப்பட இருக்கிரது.

* ஆனால் இந்தியா முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்ப இணைப்பை ஏற்படுத்த ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

* இந்த ஆண்டு 7,500 ரீடெய்ல் ஸ்டோர்கள் அமைக்கப்படும்ஆகஸ்ட் 15-முதல் ஜியோபோன் 2

இதை தொடர்ந்து அவர் கூறியதாவது: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பழைய ஜியோ போனை கொடுத்து ரூ.501 கட்டணமாக செலுத்தி புதிய ஜியோ போன்2-வை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஜியோபோன் 2 வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜியோபோன்2-வின் விலை ரூ.2,999.

ஜியோஜிகா செட்-டாப் பாக்ஸ்:-

ஜியோபோன்2 -வைத் தொடர்ந்து இஷா அம்பானியும் ஆகாஷ் அம்பானியும் இணைந்து ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். 4கே தொழில்நுட்பத்தில் தியேட்டர் அனுபவத்தை இந்த செட்-டாப் பாக்ஸ் மூலம் பெறமுடியும். இந்தியாவின் உள்ள பல்வேறு மொழிகள் மூலம் இந்த வாய்ஸ் கமாண்ட் கொடுக்கும் சேவையும் இந்த செட்-டாப் பாக்ஸில் உள்ளது.

ஜியோபோன் 2 அறிமுகம்...! 

ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகியோர் இணைந்து ஜியோபோன் 2 அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். ஜியோபோன் 2 குறித்து எங்களுக்கு தொடர்ந்து பல்வேறு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கீபேடுடன் இந்த போன் வெளிவரவிருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி கலந்து கொண்டு பேசினர். இஷா அம்பானி பேசுகையில், ஜியோ போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் அப்ளிகேஷன்களை இனி பயன்படுத்த முடியும். ஜியோ போன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலம் மற்றொரு ஜியோ போன் வாடிக்கையாளருக்கோ அல்லது மற்ற ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கோ செய்திகளை அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.1,500 செலுத்தி இந்த போனை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் தொகையை மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!