Jio Phone Next: Whatsapp மூலம் முன்பதிவு செய்வது எப்படி

JioPhone Next நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியிலிருந்து கடைகளில் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2021, 09:25 AM IST
Jio Phone Next: Whatsapp மூலம் முன்பதிவு செய்வது எப்படி title=

புதுடெல்லி: JioPhone Next நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியிலிருந்து கடைகளில் கிடைக்கும் என்று Jio மற்றும் Google அறிவித்துள்ளன.1,999 மலிவு விலையில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும், மீதமுள்ள தொகையானது 18 அல்லது 24 மாதங்களில் எளிதான EMI திட்டங்களில் செலுத்தப்படும். JioPhone Next முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. JioPhone Next ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படும் பிரகதி ஓஎஸ் மூலம் இயங்கும். இதை உருவாக்குவதன் நோக்கம் ஒவ்வொரு இந்தியரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சமமான அணுகலைப் பெற வேண்டும் என்பதே. எனவே ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் எப்படி முன்பதிவு செய்யலாம், சில எளிய ஸ்டேப் மூலம் உங்களுக்கு விளக்குவோம்.

WhatsApp மூலம் JioPhone Next ஐ முன்பதிவு செய்வது எப்படி:
JioPhone Next வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் முன்பதிவு செய்ய, 7018270182 என்ற எண்ணுக்கு 'HI' என்று டைப் செய்து உங்கள் புக்கிங் செய்ய வேண்டும். உறுதிப்படுத்தலைப் பெற்ற பிறகு, அருகிலுள்ள JioMart Digital விற்பனையாளரிடம் சென்று உங்கள் மொபைலைப் பெறவும். 

ALSO READ: Jio அதிரடி: இந்த பிளானில் இலவசமாக போன் கிடைக்கும், முழு விவரம் இதோ!! 

ஆன்லைனில் புக்கிங் செய்வது எப்படி
* www.jio.com/next ஐப் பார்வையிட வேண்டும்.
* I am Interested என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
* மொபைல் எண் மற்றும் பெயரை உள்ளிட்டு, OTP ஐ generate என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். OTP ஐ உள்ளிடவும். 
* பிறகு முகவரி, பின் கோட் போன்றவற்றைக் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்பவும்.

முக்கிய குறிப்பு: இந்த கைபேசியின் விலை ரூ. 6,499 ஆகும். ஆனால் ரூ. 1,999 முன்பணம் செலுத்துவதன் மூலம் மீதமுள்ள தொகையின் EMI-க்கான விருப்பமும் உள்ளது. மீதமுள்ள தொகையை 18 இஎம்ஐகளின் கீழ் மாதம் ரூ.250 அல்லது 24 இஎம்ஐகளின் கீழ் மாதம் ரூ.300 செலுத்தலாம்.

JioPhone Next அம்சங்கள்

ஜியோபோன் நெக்ஸ்ட், முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு உதவும் வகையில் வாய்ஸ் அசிஸ்டண்ட், ரீட் அலவ்ட், டிரான்ஸ்லேட் போன்ற ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டிருக்கும். இதில் 13MP பின் கேமரா இருக்கும். ஆனால் இதன் செல்ஃபி லென்ஸ் ரெசல்யூஷன் பற்றி இன்னும் தெரியவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டெர்னல் மெமரி வகைகளில் வரும் என நம்பப்படுகிறது. இந்த போனில் ஜியோ ஆப்ஸ் கிடைக்கும், இது மிகச் சிறந்ததாக இருக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்ட்டின் விலை சுமார் ரூ.3,499 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​ஜியோபோன் நெக்ஸ்ட் போனுக்கு சந்தையில் எந்த ஒரு போனிடமிருந்தும் கடுமையான போட்டி எதுவும் இருக்காது. தற்போதைய நிலவரப்படி, ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தை சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Jio Phone good news: இனி மிகக்குறைந்த விலையில் இந்த மலிவு விலை போனிலும் WhatsApp Calling செய்யலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News