இந்தியாவிலேயே முதல் முறையாக மனித போலீஸ் ரோபோவை கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை காவல் நிலையத்தில் போலீஸ் ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன், பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்த ரோபோ காவல் நிலையத்தின் வரவேற்பறையில் உள்ள பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala: CM Pinarayi Vijayan inaugurated KP-BOT, first humanoid police robot in India, yesterday in Thiruvananthapuram. The robot will perform duties of the front office of police headquarters. It'll receive the visitors & direct them to different places according to their needs. pic.twitter.com/GySUw6RYZ5
— ANI (@ANI) February 19, 2019
காவல் நிலையத்திற்கு வரும் மக்களை சல்யூட் அடித்து வரவேற்று, காவல் நிலையத்தில் அவர்கள் உரிய இடத்திற்கு செல்ல வழி காட்டுவது அந்த போலிஸ் ரோபோவின் முக்கிய பணி ஆகும்.
செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படும் தற்போதைய ரோபோக்கள், தகவல்களை சேகரிப்பது, சேகரித்த தகவல்களை பராமிப்பது, சென்சார் கொண்டு தகவல் அறிவது, கண்காணிப்பது போன்ற பல தேவைகளுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.