இந்திய சந்தையை கலக்க வருகிறது MSI-ன் அட்டகாசமான Laptop: அசத்தல் அம்சங்கள்!!

இந்தியாவில் எம்எஸ்ஐ கிரியேட்டர் இசட்16 மடிக்கணினியின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 12:05 PM IST
இந்திய சந்தையை கலக்க வருகிறது MSI-ன் அட்டகாசமான Laptop: அசத்தல் அம்சங்கள்!! title=

எம்.எஸ்.ஐ கிரியேட்டர் Z16 (MSI Creator Z16) மடிக்கணினிகள் பல வித வசதிகளுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கிரியேட்டர் Z16 ஆனது 11வது தலைமுறை Intel Core i9 மற்றும் i7 செயலிகள், NVIDIA கிராபிக்ஸ் மற்றும் 16-இன்ச் Quad HD+ தொடுதிரை மூலம் இயக்கப்படுகிறது. 

இந்த மடிக்கணினி 120Hz காட்சி புதுப்பிப்பு வீதம் மற்றும் 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோவையும் கொண்டுள்ளது. இந்தியாவில் எம்எஸ்ஐ கிரியேட்டர் இசட்16 (MSI Creator Z16 Price In India) மடிக்கணினியின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்தியாவில் MSI Creator Z16 விலை

MSI Creator Z16 (MSI Creator Z16) ஆனது Thunderbolt 4, USB-C, USB 3.2 மற்றும் Gen 2 மற்றும் Type-A உள்ளிட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு போர்ட்களைக் கொண்டுள்ளது. இது ஒரு லூனார் கிரே வண்ண மாறுபாட்டில் வருகிறது. இரண்டு செயலி வகைகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையான விலையில் கிடைக்கின்றன. i7 வகையின் விலை ரூ.240,990 மற்றும் i9 மாடலின் விலை ரூ.257,990 ஆக உள்ளது. இரண்டு வகைகளும் MSI பிராண்ட் கடைகள் மற்றும் Flipkart மற்றும் சில அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலமாக நேரடியாக கிடைக்கும்.

MSI Creator Z16: விவரக்குறிப்புகள்

பயனரின் பணி அனுபவத்தை மேம்படுத்த, கிரியேட்டர் Z16 மினி LED-பேக்லிட் விசைப்பலகை வடிவமைப்பிற்கு முன்னோடியாக இருந்ததாக MSI கூறுகிறது. இது ஸ்டீல் சீரிஸ் எஞ்சின் மூலம் தனிப்பட்ட விசை RGB பின்னொளியைப் பெறுகிறது மற்றும் இந்த லேப்டாப் (Laptop) மிகவும் நேர்த்தியானதாக உள்ளது. 

ALSO READ | Samsung போனில் ரூ.35,000 வரை தள்ளுபடி: நம்ப முடியாத சலுகைகள்

இது 64 ஜிபி வரையிலான ஸ்டோரேஜை வழங்குகிறது. அதன் வெப்கேம் ஐஆர் எச்டி வகையாகும். தகவல் தொடர்பு வசதிகளுக்காக இதில் கில்லர் வைஃபை 6இ மற்றும் புளூடூத் 5.2 மூலம் ஆதரவு வழங்கப்படுகிறது.

சமீபத்திய எம்எஸ்ஐ கிரியேட்டர் இசட்16 சீரிஸ் மூலம் இந்திய நுகர்வோருக்கு தடையற்ற தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவதாக எம்எஸ்ஐ கூறுகிறது. அத்தகைய தயாரிப்புகளில் தொழில்நுட்பத்தை அழகியலுடன் இணைக்கும் அதன் வடிவமைப்பு உத்தியின் உச்சக்கட்டம்தான் இந்த மாதிரிகள் என்று நிறுவனம் கூறுகிறது. 
இந்திய சந்தையில் (Indian Tech Market) வளர்ந்து வரும் செல்வாக்கை இலக்காக கொண்டு பல செயல்திறன் சார்ந்த தயாரிப்புகளை சந்தையில் தொடர்ந்து வழங்கப்போவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. 

ALSO READ | Flipkart சலுகை: 20 ஆயிரம் வரை தள்ளுபடி; Realme வாங்க சரியான நேரம்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

 

Trending News