விபத்து பாதுகாப்பு சோதனையில் பூஜ்ஜியம் வாங்கிய Wagon R.. சோதனையில் சறுக்கல்

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான வேகன் ஆர், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் பூஜ்ஜியத்தை பெற்று சோதனையில் சறுக்கியுள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2023, 12:54 PM IST
விபத்து பாதுகாப்பு சோதனையில் பூஜ்ஜியம் வாங்கிய Wagon R.. சோதனையில் சறுக்கல் title=

ஹேட்ச்பேக் கார்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் கார்களில் மாருதி சுசூகியின் Wagon R-ம் ஒன்று. இந்த கார் அண்மையில் Global NCAP கிராஷ் சோதனைகளில் பங்கேற்றது. அதில் பதின்பருவத்தினருக்கான பாதுகாப்பு சோதனையில் ஒரு ஸ்டாரையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 0 புள்ளியையும் பெற்றுள்ளது. இந்தியாவை பொறுத்தை அதிகம் விற்பனையாகும் முதல் 10 கார்களின் பட்டியலில் Wagon R இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலில் இந்த கார் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. அதாவது சிறந்ததாக இல்லை என்றே கூறலாம். 

மேலும் படிக்க | ட்விட்டர் அதிரடி: MeitY, MIB உட்பட முக்கிய கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம்

என்ஜின் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களில் நம்பகத்தன்மையை பெற்றிருக்கும் வேகன்ஆர், பட்ஜெட் விலையில் கிடைப்பதையும் உறுதி செய்கிறது. ஆனால் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனையில் சிறந்ததாக இல்லை. பயணிகளின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் தர மதிப்பீட்டில் குறைந்த மதிப்பீட்டை பெற்ற கார்களில் இதுவும் ஒன்றாக மாறிவிட்டது. 

Global NCAP தனது Crash Protocols-களை 2022-ல் அப்டேட் செய்தது. அதன்படி கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய நெறிமுறைகள் முழுமையான பாதுகாப்பு மதிப்பீட்டின் பிரதிபலிப்பாக இருக்கிறது. NCAP டெஸ்ட்டானது எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோலின் (ESP) தேவை மற்றும் Side impact protection-ற்கான கூடுதல் கிராஷ் சோதனைகள் போன்ற சேஃப்ட்டி பாராமீட்டர்களை கணக்கில் எடுத்து கொள்கிறது.

Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் Wagon R அதிகபட்சமாக 34 புள்ளிகளில் 19.69 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த ஹேட்ச்பேக் side movable deformable barrier test-ல் 13 புள்ளிகளையும், frontal offset deformable barrier test- 6.7 புள்ளிகளையும் பெற்றது. நாட்டில் விற்கப்படும் புதிய மாடல்களுக்கு 6 ஏர்பேக்ஸ் கட்டாய தேவையாகி வருவதால், மாருதி சுசுகி இந்த தேவையை வாடிக்கையாளர் விருப்பமாகக் கூட வழங்கவில்லை என்பது கவலையளிப்பதாக Alejandro Furas கூறியுள்ளார்.

இந்த காரில் Curtain airbags இல்லாததால் side pole impact டெஸ்ட் நடத்தப்படவில்லை. வாகனத்தின் மோசமான GNCAP ரேட்டிங் காரை தேர்ந்தெடுக்கும் போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வாடிகையாளர்களால் குறிப்பிட்ட கார் புறக்கணிக்கப்படலாம். அப்கிரேட் செய்யப்பட்ட Wagon R தற்போது 2 எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. 1.0-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 67 PS பவர் மற்றும் 89 Nm பீக் டார்க்கை உருவாக்கும். மற்றொன்றான 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 90 PS பவர் மற்றும் 113 Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த 2 என்ஜின்களும் சிறந்த எரிபொருள் திறன் மற்றும் குறைந்த எமிஷனை உறுதி செய்கின்றன. தவிர Wagon R காரின் CNG வேரியன்ட் சிறிய பவர் யூனிட்டுடன் 57 PS பவர் மற்றும் 82 Nm பீக் டார்க்கை வழங்குகிறது.

மேலும் படிக்க | ஏர் கூலர் வாங்குவதற்கு முன்பு இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News