மஞ்சள் காமாலையை கண்டுபிடிக்கும் புதிய செயலி

பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் கடுமையான மஞ்சள் காமாலையை கண்டுபிடிக்கும் செல்போன் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 7, 2022, 02:21 PM IST
  • பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை
  • ஸ்மார்ட்போன் செயலி மூலம் கண்டுபிடிக்கலாம்
  • லண்டன் யுனிவர்சிட்டி மருத்துவர்கள் சாதனை
மஞ்சள் காமாலையை கண்டுபிடிக்கும் புதிய செயலி title=

பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். பல்வேறு சோதனைகள் மூலம் கண்டறியப்படும் இந்த நோயை, செல்போன் செயலி மூலம் கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் விலையுயர்ந்த ஸ்கீரின் சாதனங்கள் இல்லாத இடத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கபட்டிருக்கும் குழந்தைகளின் உயிரை இந்த செயலி காப்பாற்ற உதவும் என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | இந்த SUV கார்களுக்கு அதிக டிமாண்ட், டாப் 10 பட்டியல்

நியோஎஸ்சிபி (neoSCB) எனப்படும் இந்த செயலி, லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் கானாவில் 300-க்கும் மேற்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்டது. 2020-ல் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCLH) புதிதாகப் பிறந்த 37 குழந்தைகளில் ஆரம்ப சோதனை ஆய்வு நடத்தப்பட்டது.

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள, கண்ணின் வெள்ளைப் பகுதியின் (ஸ்க்லெரா) மஞ்சள் நிறத்தைக் கணக்கிட, ஸ்மார்ட்போன் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மருத்துவக்குழு ஆய்வு செய்தது. இதில் பாசிட்டிவான ரிசல்டை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதாவது, பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், நியோஎஸ்சிபி செயலி மூலம் பிறந்த குழந்தை மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தேவைப்படும் ஆரம்பகால நோயறிதலைக் கொடுக்க முடியும் என்று  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செயலி மூலம் பரிசோதிக்கப்பட்ட 336 குழந்தைகளில், 79 புதிதாகப் பிறந்த குழந்தைகள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவர்களில் 74 பேரை செயலி சரியாக அடையாளம் கண்டுள்ளது. இது மிகவும் பொதுவான வழக்கமான ஸ்கிரீனிங் முறையின் கிடைகும் துல்லிய முடிவுகளுடனும் ஒத்துபோனதாக மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனை என்பது பொதுவானது. குழந்தை பிறந்தவுடன் கண்களுக்கு அருகில் இருக்கும் வெள்ளைத்தோல் மஞ்சளாக இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். சிறிய தாமதம்கூட பெரிய பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும். 

மேலும் படிக்க | இன்ஸ்டா பரிந்துரைக்கும் suggested postகளை தவிர்க்க சுலப வழிமுறைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News