இன்ஸ்டா பரிந்துரைக்கும் suggested postகளை தவிர்க்க சுலப வழிமுறைகள்

சமூக ஊடகங்களில் பிரபலமான செயலியான Instagram, பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளை மறைப்பதற்கான சுலப வழிமுறைகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2022, 02:10 PM IST
  • இன்ஸ்டாவின் பரிந்துரைப்பை நிராகரிக்க சுலப வழி
  • பரிந்துரை தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி
  • இன்ஸ்டாவில் அதிக நேரம் வீணாவதை தடுக்க வழி
இன்ஸ்டா பரிந்துரைக்கும் suggested postகளை தவிர்க்க சுலப வழிமுறைகள் title=

 

புதுடெல்லி: உலகின் மிகவும் பிரபலமான புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு செயலிகளில் ஒன்றாக இருப்பது இன்ஸ்டாகிராம் ஆப். பிரபலமான Instagram அனைவருக்கும் நம்பமுடியாத போதை தரும் பொழுதுபோக்கு செயலியாகவும் இருக்கிறது. 

நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீங்கள் பின்தொடரும் பிற கணக்குகளின் அனைத்து புதுப்பிப்புகளையும் தவிர,புதுப்புது மனிதர்களின் இடுகைகளை, என்று நினைத்தால், ​​அது உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பகிர்வுகள் என்று காண்பிக்கும்.

அதை நீங்கள் ஸ்க்ரோலிங் செய்யலாம். ஸ்க்ரோலிங் செய்து புதியவர்களின் இடுகைகளையும் பார்க்கலாம். 

ஒரு பயனரின் செயல்பாடு முதல், அவர்கள் யாரைப் பின்தொடர்கிறார்கள், எந்த இடுகைகளை விரும்பினார்கள், சேமித்தார்கள் அல்லது கருத்துத் தெரிவித்தனர், அந்த இடுகை எவ்வளவு பிரபலமானது, இன்ஸ்டாகிராமில் உள்ள பிற பயனர்களை தொடர்வது என்று நமது இன்ஸ்டா செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் இருக்கும். 

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் ரீல்ஸை எளிதில் டவுன்லோடு செய்வது எப்படி?

கடந்த சில வாரங்களில் மற்ற இன்ஸ்டா பயனர்கள் அந்தக் கணக்குடன் எத்தனை முறை தொடர்புகொண்டுள்ளனர் என்பது உட்பட பல தரவுகளின் அடிப்படையிலேயே ஒருவருக்கு இடுகைகளை இன்ஸ்டா பரிந்துரைக்கிறது. 

எளிமையாகச் சொன்னால், இன்ஸ்டாகிராம் அதன் வசம் உள்ள அனைத்துத் தகவலையும் பயன்படுத்தி, தனது பிளாட்ஃபார்மில் உங்களை அதிக நேரம் இணைத்துக் கொள்ள பயன்படுத்தும், இந்த சுழற்சியில் இருந்து விடுபட முடியாமல் பலரும் இந்த இன்ஸ்டா மோகத்தில் மூழ்கி விடுகின்றனர். 

சரி, இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா என்றால் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள் அம்சத்தை நீங்கள் முழுவதுமாக முடக்க முடியாது என்பதே பதில். 

ஆனால்,  உங்களுக்குப் பிடிக்காத கணக்குகளில் இருந்து எந்த வகையான இடுகைகள் அல்லது இடுகைகளை மறைக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதை செய்தாலே, உங்களுக்கு ஏற்படும் பாதி டென்சன் குறைந்துவிடும்.

எனவே, Instagram இல் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளை மறைக்க உதவும் படிப்படியான வழிகாட்டியை தெரிந்துக் கொண்டு தேவையென்றால் பயன்படுத்தி (Tips and Tricks) பயனடையுங்கள்.  

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி?

Instagram இன் ஆண்ட்ராய்டு, iOS அடிப்படையிலான பயன்பாடுகளில் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளை எவ்வாறு மறைப்பது
படி 1: Instagram பயன்பாட்டில், பரிந்துரைக்கப்பட்ட இடுகையின் மேல் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். 

படி 2: உங்கள் ஊட்டத்தில் இதே போன்ற பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளைப் பார்ப்பதை நிறுத்த கிராஸ் ஐகானைத் கிளிக் செய்யவும்

படி 3: இதைத்தவிர, உங்கள் ஊட்டத்தில் (feed)பரிந்துரைக்கப்பட்ட அனைத்து இடுகைகளையும் 30 நாட்கள் வரை வருவதை தடுக்க ஸ்னூஸ் (snooze button to snooze all suggested posts) பொத்தானை கிளிக் செய்யவும்.  

இவை அனைத்திலும் மிகவும் சுலபமான மற்றுமொரு வழியும் உண்டு. செயலியின் மேல் வலது மூலையில் தோன்றும் மூன்று புள்ளிகளைத் தட்டும்போது தோன்றும் 'ஆர்வமில்லை' (Not Interested) விருப்பத்தைத் தெரிவு செய்தால் போதும்.

மேலும் படிக்க | தது Airtel vs Jio: எந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்தது

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News