புத்தாண்டுக்கு புதிய போன் வாங்க வேண்டுமா? ஜனவரியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்

New Smartphones to Launch in January 2024: புதிய ஸ்மார்ட்போன்கள் புத்தாண்டுக்கு அறிமுகமாக இருக்கின்றன. பல பிராண்டுகள் ஜனவரியில் ரிலீஸாகும் நிலையில், எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என முடிவு எடுக்க இந்த பட்டியல் உங்குக்கு உதவும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 18, 2023, 02:33 PM IST
  • ஜனவரியில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்கள்
  • சூப்பர் கேமரா மற்றும் பவர் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது
  • கேமராவில் ஏஐ அம்சம் எல்லாம் இருப்பதால் எதிர்பார்ப்பு
புத்தாண்டுக்கு புதிய போன் வாங்க வேண்டுமா? ஜனவரியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் title=

இன்னும் சில நாட்களில் டிசம்பர் முடிந்து 2024 வரப்போகிறது. பல பேர் புத்தாண்டில், புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என காத்திருக்கின்றனர். 5 ஸ்மார்ட்போன்கள் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. OnePlus, Xiaomi, Samsung மற்றும் Vivo ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய தள்ளுபடியுடன் புத்தாண்டில் ரிலீஸாக இருக்கின்றன. இந்த ஃபோன்களில் 100W வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் சிறந்த கேமரா அமைப்பு இருக்கின்றன. ஒவ்வொரு மொபைலுக்கும் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 12

ஒன்பிளஸ் 12 இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதன் அம்சங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. போனில் 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கும். இந்த ஃபோன் Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது தவிர, ஃபோன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரும். போனில் 5400mAh பேட்டரி இருக்கும். போனில் 50எம்பி கேமரா இருக்கும்.

மேலும் படிக்க | பல்சரை போட்டுத்தாக்க வரும் டிவிஎஸ் பைக்... புத்தாண்டு தள்ளுடியுடன் - மைலேஜ் முதல் EMI வரை இதோ!

Xiaomi Redmi Note 13

Xiaomi Redmi Note 13 தொடர் ஜனவரி 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த சீரிஸில் மூன்று மாடல்கள் இருக்கும் (Redmi Note 13, Redmi Note 13 Pro மற்றும் Redmi Note 13 Pro Plus). MediaTek Dimensity 7200 செயலி ஆதரவு போனில் கிடைக்கும். போனில் 5000mAh பேட்டரி இருக்கும்.

Vivo X100 Pro மற்றும் X100

Vivo ஒரு புதிய டீசரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் Vivo X100 தொடரின் வெளியீடு குறித்து நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள், விவோ தனது புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை விரைவில் அறிமுகப்படுத்துவது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக இது ஜனவரியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் MediaTek Dimensity 9300 சிப்செட் மூலம் இயக்கப்படும். இதில் 1 இன்ச் பயோனிக் சென்சார் வழங்கப்படும்.

ஒன்பிளஸ் 12ஆர்

OnePlus 12 உடன் OnePlus 12R -ஐயும் அறிமுகப்படுத்துகிறது. அதாவது ஜனவரி 23 ஆம் தேதி தொலைபேசி வழங்கப்படும். போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இதுவரை எதுவும் தகவல் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | புது வருஷத்தில் மாஸாக கால் வைக்கும் யமஹா... வருகிறது 2 மிரட்டலான பைக்குகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News