Nokia C20 Plus: ஜியோ பயனர்களுக்கு சூப்பர் சலுகை; புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Nokia C20 Plus மாடல் இன்று இந்தியாவில் அறிமுகமானது மற்றும் விற்பனையையும் தொடங்கி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2021, 11:00 AM IST
Nokia C20 Plus: ஜியோ பயனர்களுக்கு சூப்பர் சலுகை; புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் title=

நோக்கியா சி 20 பிளஸ் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் ஆக்டா-கோர் SoC உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது.

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை (Budget Smartphone) நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுளை பெறலாம். நோக்கியா சி 20 பிளஸ் மாடலானது நோக்கியா சி 20 இன் மேம்படுத்தலாக வருகிறது. நோக்கியா சி 20 பிளஸ் (Nokia C20 Plus) ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்தியாவில் ரூ.8,999 க்கும், இதன் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.9,999 க்கும் வாங்க கிடைக்கும்.

ALSO READ | இந்தியாவில் அறிமுகமானது Motorola Moto E7 Power ஸ்மார்ட்போன், என்னென்ன அம்சங்கள்?

மேலும் இந்த ஸ்மார்ட்போனை நோக்கியா இந்தியா வலைத்தளம், முன்னணி மொபைல் சில்லறை விற்பனையாளர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ பாயின்ட் விற்பனை நிலையங்கள் மூலம் நேற்று முதல் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை நீங்கள் ப்ளூ மற்றும் கிரே நிறங்களில் வாங்க கிடைக்கும். அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு. ரூ.4,000 மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும்.

நோக்கியா சி 20 பிளஸ் விவரக்குறிப்புகள்
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி3 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி3 பிளஸ் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4950 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. 

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11,ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி,3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. 

ALSO READ | Infinix Smart 5A: வெறும் ரூ.6499-க்கு அட்டகாச போன் அறிமுகம், முழு விவரம் இதோ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News