Nokia T21 ரிவ்யூ: தரமான பேட்டரி பேக், நோக்கியாவின் அசத்தல் டேப்லெட்

Nokia T21 Review: நோக்கியா T21 லோயர் எண்ட் மிட்-ரேஞ்ச் டேப்லெட் ஆகும், இதன் விலை ரூ.17,999 முதல் தொடங்குகிறது. இந்த டேப்லெட் ரியல்மியின் பேட் எக்ஸ் மற்றும் ஒப்போவின் பேட் ஏர் ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இப்போது நாம் Nokia T21 டேப்லெட்டில் உள்ள சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2023, 12:10 PM IST
  • Nokia T21 ரிவ்யூ.
  • வலுவான பேட்டரி மற்றும் அசத்தல் சவுண்ட் குவாலிட்டி.
  • நோக்கியாவின் டேப்லெட் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Nokia T21 ரிவ்யூ: தரமான பேட்டரி பேக், நோக்கியாவின் அசத்தல் டேப்லெட் title=

Nokia T21 விமர்சனம்: நோக்கியா நிறுவனம் எப்போதும் சக்திவாய்ந்த பேட்டரி சாதனங்களுக்கு பெயர் பெற்றது. நோக்கியா புதிய உத்தியுடன் சந்தையில் இறங்கியுள்ளது. அதன்படி இது நடுத்தர மற்றும் பட்ஜெட் பிரிவு போன்கள் மற்றும் டேப்லெட்களை அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் நோக்கியா பிராண்ட் சமீபத்தில் Nokia T21 எனப்படும் குறைந்த அளவிலான மிட்-ரேஞ்ச் டேப்லெட்டைக் கொண்டு வந்துள்ளது, இதன் விலை ரூ. 17,999 ஆகும், மேலும் 4G LTE மாறுபாட்டிற்கு ரூ.18,999 ஆகும். இந்த டேப்லெட் ரியல்மியின் பேட் எக்ஸ் மற்றும் ஒப்போவின் பேட் ஏர் ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடுகிறது. எனவே இப்போது நாம் Nokia T21 டேப்லெட்டில் உள்ள சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...

நோக்கியா T21 விமர்சனம்: வடிவமைப்பு
நோக்கியா T21 வடிவமைப்பு மிகவும் கண்ணியமானது. முழு உடலும் அலுமினியத்தால் ஆனது மற்றும் பிடிக்க மிகவும் வசதியானது. அலுமினியத்தால் செய்யப்பட்டிருந்தாலும், அது மிகவும் இடையில் லேசானது. டேப்லெட்டின் பொத்தான்கள் மிகவும் சுலாமாக கிளிக் செய்யக்கூடியவை. இருப்பினும் இந்த சாதனத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், அதில் கைரேகை சென்சார் கிடையாது. ஆனால் இதில் ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளது.

மேலும் படிக்க | சான்ஸே இல்ல...இவ்வளவு கம்மி விலையில iPhone 14 கிடைக்குதா?

நோக்கியா T21 விமர்சனம்: டிஸ்ப்ளே
Nokia T21 ஆனது 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் 10.4-இன்ச் 2K டிஸ்ப்ளே பெறுகிறது. டேப்லெட்டில் 360 நிட்கஸ் பிரகாசம் கிடைக்கிறது. போதுமான அளவு பெரியதாக இருக்கும் 2k ரெசல்யூஷன் டிஸ்ப்ளே போதுமான கூர்மை மற்றும் தெளிவுடன் வருக்கிறது. மூடிய அறையில் டேப்லெட்டின் பிரகாசம் சிறப்பாக இருக்கிறது. நோக்கியா T21 ஆனது 12nm Unisoc Tiger T610 மூலம் இயக்கப்படுகிறது. டேப்லெட்டில் 64ஜிபி சேமிப்பு கிடைக்கிறது. ஆனால் மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன், சேமிப்பகத்தை 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்.

நோக்கியா T21: சவுண்ட்
நோக்கியா T21 இன் சவுண்ட் பற்றி பேசுகையில், இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. டேப்லெட்டின் மியூசிக் சிறப்பாக உள்ளது, ஏனெனில் இதில் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன.

நோக்கியா T21: பேட்டரி
நோக்கியா T21 ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8200mAh பேட்டரியைப் பெறுகிறது. நாங்கள் மதிப்பாய்வு செய்தபோது, ​​இந்த டேப்லெட் 2 முதல் 2.5 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் அதிக உபயோகத்தில் ஒன்றரை நாட்களுக்கு வசதியாக இந்த டேப்லெட்டை இயங்க முடியும். பெரிய பேட்டரி இருப்பதால் சார்ஜ் செய்ய சிறிது நேரம் ஆகும். பூஜ்ஜியத்திலிருந்து 100% வரை சார்ஜாக குறைந்தது 2 மணிநேரம் ஆகும். இருப்பினும் இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், டைப்-சி சார்ஜர் இதனுடம் கிடைக்கும்.

நோக்கியா T21: கேமரா
Nokia T21 ஆனது பின்புறத்தில் 8MP கேமராவையும் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. புகைப்படத்தை கிளிக் செய்வதன் மூலம் HD தரம் கிடைக்காது.

மேலும் படிக்க | ரூ.155க்கு அசத்தல் ஆப்பரை வழங்கியுள்ள ஏர்டெல்! சிறப்பம்சங்கள் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News