இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் Live Cricket கண்டு ரசிக்கலாம்..!!!

அமேசான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இடையிலான பல ஆண்டுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரைம் வீடியோ, பெண்கள் மற்றும் ஆண்களின் அனைத்து சர்வதேச போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப முடியும். இதில் ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகியவை அடங்கும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 01:20 PM IST
  • அமேசான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இடையிலான பல ஆண்டுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரைம் வீடியோ, பெண்கள் மற்றும் ஆண்களின் அனைத்து சர்வதேச போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப முடியும்.
  • இதில் ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகியவை அடங்கும்
இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் Live Cricket கண்டு ரசிக்கலாம்..!!! title=

அமேசான் பிரைம் வீடியோவில் Live Cricket கண்டு ரசிக்கலாம். 2025-2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது.

இதை அறிவித்த, ​​அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) , பிரத்தியேக லைவ் கிரிக்கெட், அதாவது கிரிக்கெட்டை நேரலையாக ஒளிபரப்பும் உரிமைகளைக் (Telecast rights) கொண்ட முதல் இந்திய ஸ்ட்ரீமிங் சேவையாக மாறியுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இடையிலான பல ஆண்டுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரைம் வீடியோ, பெண்கள் மற்றும் ஆண்களின் அனைத்து சர்வதேச போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப முடியும். இதில் ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகியவை அடங்கும்

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டீம் இந்தியா, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமேசான் பிரைம் வீடியோ, இந்த கிரிக்கெட் போட்டித் தொடரை நேரடியாக ஒளிபரப்பும். இதன் பின்னர், அமேசான், இரண்டாவது சுற்றுப்பயணத்தை ஒளிபரப்பும் உரிமையையும் வாங்கியுள்ளத், அதன் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாதத்திற்குப் பிறகு 2020-21 ஆம் ஆண்டிற்கான ஒளிபரப்பு உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்திடப்படவில்லை.

இந்தியாவில் மிகவும் வரவேற்றப்பை பெற்றுள்ள, கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், கிரிக்கெட் போட்டிகளை நேரிடையாக ஸ்ட்ரீம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அமேசான் பிரைம் வீடியோவின் இயக்குநரும், இந்திய பிரிவின் பொது மேலாளருமான கவுரவ் காந்தி கூறுகிறார். 

அமேசான் பிரைம் வீடியோவுடனான ஒப்பந்தம் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் வைட்டும் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் வரவேற்பை போல, வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

நேரடி கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பை தவிர, அமேசான் பிரைம் வீடியோ பட்டியலில் ஏற்கனவே பல விளையாட்டுக்கள் உள்ளன. Night Football, தி பிரீமியர் லீக், ATP டூர் நிகழ்ச்சிகள், WTA, தி யுஎஸ் ஓபன் டென்னிஸ், UEFA சாம்பியன்ஸ் லீக் மற்றும் சியாட்டில் சவுண்டர்ஸ் போன்றவை அதன் நேரடி ஸ்ட்ரீமிங் விளையாட்டு ஒளிபரப்பின் ஒரு பகுதியாகும். விளையாட்டு ரசிகர்கள் பிரைம் வீடியோ சேனல்கள் மூலம்  Eurosport, MLB.TV, NBA League Pass, மற்றும் PGA TOUR LIVE ஆகியவற்றிற்கும் சப்ஸ்கிரைப் செய்யலாம்.

ALSO READ | IPL 2020 FINAL: கோப்பையை வென்று மகுடம் சூடப் போவது யார்? மண்ணைக் கவ்வப் போவது யார்?
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News