இனி Password இல்லாமல் Gmail login செய்யலாம்: புது வகை பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

கூகிள் தனது பாதுகாப்பை வலுப்படுத்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. கூகிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு, நீங்கள் கடவுச்சொல்லை, அதாவது பாஸ்வர்டை உள்ளிட தேவை இருக்காது. 

Written by - ZEE Bureau | Last Updated : May 8, 2021, 11:12 AM IST
  • கூகிள் கணக்கை திறக்க இனி பாஸ்வர்ட் தேவையில்லை.
  • கூகிள் இந்த தகவலை ஒரு வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
  • இதனால் கூகிள் கணக்கின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
இனி Password இல்லாமல் Gmail login செய்யலாம்: புது வகை பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

புதுடெல்லி: கூகிள் தனது பாதுகாப்பை வலுப்படுத்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. கூகிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு, நீங்கள் கடவுச்சொல்லை, அதாவது பாஸ்வர்டை உள்ளிட தேவை இருக்காது. மறுபுறம், யாரேனும் உங்கள் கடவுச்சொல் மற்றும் பயனர் பெயர் கொண்டு உங்கள் கணக்கைத் திறக்க முயற்சித்தால், அதுவும் நடக்காது. அதாவது, வரும் காலத்தில் உங்கள் கணக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

இரண்டு காரணி அங்கீகார அம்சம் (Two Factor Authentication Feature)

கூகிள் இரண்டு காரணி அங்கீகார அம்சத்தின் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தும். டீஃபால்டாக மக்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும். அதாவது, இது முன்புபோல் ஒரு தேர்வாக, ஆப்ஷனாக இருக்காது. இது உங்கள் கணக்கில் தானாகவே செயல்படுத்தப்படும். 

கூகிளில் (Google) சைன் இன் செய்ய பயனர்கள் இரண்டு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூகிள் தனது வலைப்பதிவில் கூறியுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்களின் பாதுகாப்பு வலுவாக இருக்கும். சரியான முறையில் கான்ஃபிகர் செய்யப்பட்டுள்ள கணக்குகளுக்கு இந்த அம்சம் டீஃபால்டாக வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

ALSO READ: Android users alert! உயடியானடியாக இதை செய்யுங்கள், இல்லையெனில்

Password இல்லாமல் Gmail திறக்கும்

இந்த அம்சம் செயல்படுத்தப்பட்ட பிறகு, உங்கள் சாதனம் இல்லாமல் வேறு யாராலும் உங்கள் Google கணக்கைத் திறக்க முடியாது. யாரிடமாவது உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வர்ட் (Password) ஆகியவை இருந்தாலும், அவரால் உங்கள் கூகிள் கணக்கை திறக்க முடியாது. நீங்கள் இரண்டு காரணி அங்கீகாரத்தின் மூலம் கணக்கில் லாக் இன் செய்யும்போது, உங்கள் தொலைபேசியில், எஸ்,எம்,எஸ், வாய்ஸ் கால் அல்லது கூகிள் செயலி மூலம் கோட் கிடைக்கும். இனி பாஸ்வர்ட் திருட்டால் உங்கள் கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தப்படக் கூடிய சாத்தியமே இல்லை என்றும் வலைப்பதிவில் கூறப்பட்டுள்ளது.  

கடவுச்சொல் பயன்பாடு முடிவடையும்

வரவிருக்கும் காலங்களில், கூகிள் கடவுச்சொல்லின் பயன்பாடு முற்றிலும் முடிவுக்கு வரப்போகிறது. அனைத்து கணக்குகளுக்கும் மக்கள் ஒரு கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணமாகும். இரண்டு காரணி அங்கீகாரம் அல்லது டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷனுக்கு ஃபிசிக்கல் செக்யூரிட்டி கீ-யும் பயன்படுத்தப்படலாம். ஃபிசிக்கல் செக்யூரிட்டி கீ-ஐ மடிக்கணினியின் யூ.எஸ்.பி போர்ட் அல்லது தொலைபேசியின் அருகே வைத்து பயன்படுத்தலாம்.

ALSO READ: ட்விட்டரில் Dark Mode அம்சத்தை எப்படி இயக்குவது தெரியுமா? இதோ Tips

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News