திறந்தவெளி இணைய உலாவி நிறுவனமான Mozilla இந்தியாவில் தனது இலகுரக மொபைல் உலாவியான Firefox Lite-னை அறிமுகம் செய்துள்ளது!
வேகமான மற்றம் இலகுரக மொபைல் உலாவியின் தேவை இந்தியாவில் அதிகம் இருப்பதை உணர்ந்த Mozilla, இந்தியாவின் குறைந்த வேக இணைய சேவையினை சமாளிக்கும் விதமாக Firefox Lite-னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக இந்தியாவின் Times Internet மற்றும் DB Digital உடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது.
அதே வேலையில் இந்தியாவில் தனது சந்தையினை விரிவுப்படுத்தும் விதமாக பிரபல செயலி விளம்பரதாரர் நிறுவனமான MoMagic உடனும் இணைந்திருக்கிறது.
இதுகுறித்து Mozilla நிறுவனத்தின் ஆசிய கிளைக்கான உற்பத்தி தலைவர் ஜோய் சியாக் தெரிவிக்கையில்., உலகளாவிய ரீதியில் இரண்டாவது பெரிய ஆன்லைன் சந்தையினை இந்தியா கொண்டுள்ளது. இந்திய இணைய பயனர்களில் பெருமளவு பயனர்களை தன் கைவசம் வைத்துள்ள Mozilla வரும் 2023-ஆம் ஆண்டிற்குள் 666.4 மில்லியன் வாடிக்கையாளர்களை பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை பொருத்தமட்டிலும் டெஸ்க்டாப் பயனர்களை விட மொபைல் பயனர்களே அதிகம் எனவும், மொபைல் பயனர்களே தங்களது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளம்பரதாரர்கள் அல்லது வலைத்தளங்கள் வடிவமைப்பாளர்கள் பெரும்பாலும் தரவு சேகரிப்பு உலாவிகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள Firefox Lite ஆனது அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Firefox Lite ஆனது தற்போது ஆசியாவின் 15 (பங்களாதேஷ், புருனே, கம்போடியா, சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம்)சந்தைகளில் கிடைக்கின்றது.