Oppo K12x 5G... அசத்தலான அம்சங்கள் நிறைந்த பட்ஜெட் போன்..!!

Oppo K12x 5G: இந்தியாவில் Oppo K12x 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கே-சீரிஸின் முதல் சாதனம் இது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 29, 2024, 04:38 PM IST
  • Vivo, Realme மற்றும் Lava போன்ற பிராண்டுகளுக்கு போட்டி கொடுக்கும் ஓப்போ
  • Oppo K12x 5G ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய அம்சங்கள்.
  • இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கே-சீரிஸின் முதல் சாதனம் இது.
Oppo K12x 5G... அசத்தலான அம்சங்கள் நிறைந்த பட்ஜெட் போன்..!! title=

Oppo K12x 5G: இந்தியாவில் Oppo K12x 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கே-சீரிஸின் முதல் சாதனம் இது. Vivo, Realme மற்றும் Lava போன்ற பிராண்டுகளுக்கு போட்டி கொடுக்கும் ஓப்போ ஸ்மார்ட்போனில் 50எம்பி கேமரா உள்ளது. அதோடு, HD டிஸ்ப்ளே மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் பேட்டரி உள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Oppo போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி  அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் Oppo K12x 5G விலை

Oppo K12x 5G இரண்டு ரேம் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி + 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாறுபாட்டின் விலை ரூ.12,999. இதன் 8ஜிபி + 256ஜிபி சேமிப்பு மாடலை ரூ.15,999க்கு வாங்கலாம். இந்த சாதனத்தின் விற்பனை ஆகஸ்ட் 2 முதல் Flipkart ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் தொடங்கும், ப்ரீஸ் ப்ளூ மற்றும் மிட்நைட் வயலட் வண்ண விருப்பங்களில் ஸ்மார்போனை (Smartphone) வாங்கலாம்.

Oppo K12x 5G ஸ்மார்ட்போனில் முக்கிய அம்சங்கள் (Oppo K12x 5G Specifications)

Oppo K12X 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஆபரேடிங் சிஸ்டத்தில் வேலை செய்கிறது. உடல் 360 டிகிரி டேமேஜ் ப்ரூஃப் அம்சம் கொண்டது. அதாவது கீழே விழுந்தாலும் போன் சேதமடையாது. இதன் தடிமன் 7.68 மிமீ மற்றும் எடை 186 கிராம். 6.67 இன்ச் HD பிளாட் டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின்  புதுப்பிப்பு விகிதம் 120Hz ஆகும். இந்த கைபேசியில், பாதுகாப்புக்காக கைரேகை சென்சார் மற்றும்  முகத்தை கொண்டு திறக்கும் வசதி உள்ளது.

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் இவ்வளவு ஸ்மார்ட்டாய் இருக்குமா? அதிர வைக்கும் Galaxy Z Fold6 சாம்சங் ஃபோன்! 

Oppo K12x 5G ஸ்மாட்போன் கேமிரா

சிறந்த புகைப்படங்களைக் கிளிக் செய்ய, இதில் 32MP முதன்மை சென்சார் மற்றும் 2MP இரண்டாம் நிலை லென்ஸ் உள்ளது. Oppo புதிய ஸ்மார்ட்போனில் LED லைட் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக மொபைல் போனில் 8எம்பி கேமரா உள்ளது. இரவு மற்றும் போர்ட்ரெய்ட் மோட் போன்ற கேமரா அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி மற்றும் கனெக்டிவிடி

Oppo K12x ஸ்மார்ட்போனில் இணைப்பிற்காக, 5G, 4G VoLte, Wi-Fi, GPS, Bluetooth மற்றும் USB Type-C போர்ட் உள்ளது. மொபைல் ஃபோனில்  MediaTek Dimensity 6300 செயலி மற்றும் 5100mAh பேட்டரி உள்ளது, இது 45W SuperVOOC வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்போன் IP54 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அதாவது தண்ணீர் தெறித்தாலும் இந்த போன் சேதமடையாது.

மேலும் படிக்க | பைக்கையே காராக மாற்றி சாலையில் ஓட்டும் விஞ்ஞானி! மாத்தி யோசி மாமு மோமெண்ட்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News