புதுடில்லி: சைபர் ஸ்பேஸ் (ஜி.சி.சி.எஸ். 2017) உலகளாவிய மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, UMANG மின்னனு பயன்பாட்டு செயலியினை அறிமுகப்படுத்தினார்.
மத்திய அரசின் தகவல்களை அறிந்துக்கொள்ள உதவும் இந்த செயலியானது அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
UMANG (Unified Mobile Application for New-age Governance) ஆனது, பல்வேறு அரசாங்க அமைப்புகள் மற்றும் குடிமக்களை மையப்படுத்த பயன்படுகிறது.
இந்த செயலியினை ஸ்பைஸ் டிஜிட்டல் உருவாக்கி உள்ளது. UMANG செயலியின் முக்கிய சிறப்பம்சங்களில்... பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் முன்மாதிரி திட்டமான Aadhaar, DigiLocker and PayGov போன்ற பல்வேறு சேவைகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
At the Global Conference on Cyber Space, launched the UMANG Mobile App, which will provide various citizen-centric services. @gccsofficial #GCCS2017 pic.twitter.com/djzSwegZOB
— Narendra Modi (@narendramodi) November 23, 2017
செயலியின் பாதுகாப்பினை கருதி, இச்செயலியினை அணுகுவதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.