ரிலையன்ஸ் ஜியோ தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதையடுத்து, இதற்கு போட்டியான பல நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல சலுகைகளை வழங்கினாலும் ஜியோவை முந்தமுடியவில்லை.
இதை, தொடர்ந்து தற்போது ஜியோவின் 4ஜி டேட்டா வேகம் குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதையடுத்து, ஜியோ அடுத்த ஆண்டு மே மதம் முதல் ஆப்பர் பட்டியளின் விலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ-வின் அதிரடி சலுகை: விவரம் உள்ளே!
ஒரு வருடத்திற்கான இலவச அழைப்பு மற்றும் 750 ஜி.பி 4ஜி டேட்டா வழங்குகிறது ஜியோ. இந்த சலுகை கூகுள் இன் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான இலவச அழைப்பு மற்றும் 750 ஜிபி 4ஜி தரவு வழங்குகிறது. எனினும், இந்த திட்டம் கூகுள் இன் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வாங்கக்கூடிய பயனர்களுக்கு மட்டும் இருக்கும்.
இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான நெட்வொர்க் இலவச அழைப்புகள் கிடைக்கும். எஸ்டிடி மற்றும் ரோமிங் இலவசமாக செய்யலாம். இந்த வாய்ப்பை ஒரு வருடத்திற்க்கு பொருந்தும். இதன் திட்ட மூலம் 750 ஜிபி 4ஜி தரவு இலவசமாக கிடைக்கும். இதன் செல்லுபடி காலம் 360 நாட்கள் ஆகும். ஜியோ ஆப் மற்றும் தேசிய மற்றும் உள்ளூர் செய்திகள் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை ரூ 9,999 -க்கு கிடைக்கும்.