ஜியோபோன் முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய தகவல்!!

Last Updated : Oct 1, 2017, 03:06 PM IST
ஜியோபோன் முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய தகவல்!!

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனின் முதற்கட்டமாக முன்பதிவு செய்த சுமார் 60 லட்சம் பேருக்கும் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

அந்த வகையில் ஜியோபோன் முன்பதிவு செய்தோருக்கு அக்டோபர் 19-ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும் என ரிலையனஸ் ஜியோ டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. அதில்,

எங்களை தொடர்பு கொண்டமைக்கு நன்றி, எவ்வித இடர்பாடுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் ஜியோபோன்கள் திட்டமிடப்பட்டு விநியோகம் செய்யப்படும். 

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தீபாவளிக்கு முன் ஜியோபோன் விநியோகம் செய்யப்பட்டும்.' என தெரிவித்துள்ளது. 

ஜியோபோன் சிறப்பம்சங்கள்:

- 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே
- 512 எம்பி ரேம்
- 2 எம்பி பிரைமரி கேமரா
- 0.3 எம்பி செல்ஃபி கேமரா
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் கோர் பிராசஸர்
- 4ஜி வோல்ட்இ
- வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத்
- வாய்ஸ் அசிஸ்டண்ட்
- 2000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஜியோபோனுடன் ஜியோ மியூசிக், மைஜியோ, ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ எக்ஸ்பிரஸ் நியூஸ் மற்றும் பல்வேறு செயலிகளை இயக்க வழி செய்கிறது. கூடுதலாக ஸ்கிரீனினை பாஸ்வேர்டு, போட்டோ லாக், டார்ச்லைட், அவசர கால அழைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

More Stories

Trending News