Royal Enfield Hunter 350: இந்திய சந்தையை கலக்க விரைவில் களமிறங்குகிறது

 ராயல் என்ஃபீல்டு புதிய வகை மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது. இது 2021 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2021, 03:05 PM IST
Royal Enfield Hunter 350: இந்திய சந்தையை கலக்க விரைவில் களமிறங்குகிறது title=

Royal Enfield: இந்திய சந்தையில் Meteor 350 ஐ அறிமுகப்படுத்திய பிறகு, இப்போது ராயல் என்ஃபீல்டு புதிய வகை மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது, இது 2021 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஃப்-ரோடிங் மற்றும் சாலை-சார்ந்த ராயல் என்ஃபீல்ட் (Royal Enfield) ஹிமாலயன் சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு முன்மாதிரியை சோதித்து பார்த்தது. இப்போது Hunter 350 ஆனது நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது தெளிவான பார்வையைப் பெற்றுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் Meteor 350-ன் அதே பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படுகிறது. அதன் எஞ்சினும் அதே மோட்டார் சைக்கிளின் எஞ்சினைப் போல இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 J-பிளாட்ஃபார்மில் 349 சிசி எஞ்சினுடன் 22 பிஎச்பி பவரையும், 27 என்எம் பீக் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த எஞ்சினுடன் நிறுவனம் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை வழங்கக்கூடும். புதிய மோட்டார்சைக்கிள் (Motorcycle) 0-100 கிமீ வேகத்தை மிக சீராக எட்டுவதை சோதனை வீடியோவில் காண முடிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை, ஆனால் புதிய மோட்டார்சைக்கிளின் எடை Meteor 350 ஐ விட மிகவும் குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ALSO READ: நீண்ட நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்கள் Bike ஓடிக்கிட்டே இருக்கும்: டிப்ஸ் இதோ 

2021 மாடல்களான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ஹிமாலயன் ஆகியவற்றில் நாம் முன்பு பார்த்தது போல, ஹண்டர் 350-யும் செமி-டிஜிட்டல் கன்சோல் மற்றும் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டத்துடன் வரும். ஹண்டர் 350 இந்த பிரிவில் மிகவும் மலிவு விலையில் இருக்கும் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்று ஊகங்கள் பரவி உள்ளன,

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, ​​புதிய பைக் (Bike) ஹோண்டா சிபி 350 ஆர்எஸ், ஜாவா ஸ்டாண்டர்ட் 300, ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் பெனெல்லி இம்பீரியல் ஆகியவற்றுடன் போட்டியிடும். நாட்டில் இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.70 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: Bike Mileage Tips:உங்கள் பைக்கின் மைலேஜை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News