Royal Rides: 60 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் ஸ்கோடா, புதிய பைக்குகளும் களத்தில்

நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் பல புதிய மாடல்களை ராயல் என்ஃபீல்ட்  அறிமுகப்படுத்துகிறது 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 13, 2021, 06:54 PM IST
  • நடப்பு நிதியாண்டில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்ட்,
  • 60 ஆயிரம் கார்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்யும்
  • ஓவ்வொரு காலாண்டிலும் ஒரு புதிய மாடல் அறிமுகமாகும்
Royal Rides: 60 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் ஸ்கோடா, புதிய பைக்குகளும் களத்தில் title=

பிரபல மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் ராயல் என்ஃபீல்ட் நடப்பு நிதியாண்டில் பல புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இது தாமதமாகிவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த நடப்பு நிதியாண்டு உகந்ததாக இருக்கும் என்று ராயல் என்ஃபீல்ட் கருதுகிறது. நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் பல புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் ஒரு பிரிவான ராயல் என்ஃபீல்ட், தனது பல புதிய தயாரிப்புகளின் உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது இன்னும் சில நாட்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று பிடிஐ செய்தி கூறுகிறது.

Also Read | Electric Vehicle: பெட்ரோல் கவலை வேண்டாம், பட்ஜெட்டுக்குள் அசத்தலான ஸ்கூட்டர்கள் இதோ

ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தும் புதிய தயாரிப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று ராயல் என்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வினோத் கே. தாசரி கூறுகிறார். இது குறித்து நிறுவனம் மிகவும் உற்சாகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.  

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஒவ்வொரு காலாண்டிலும் புதிய மாடல் ஒன்றை தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறது என்று தாசரி கூறுகிறார். கொரோனா தொற்றுநோய் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டாலும், சில சிறப்பு மாடல்கள் விரைவில் வெளிவர உள்ளன என்று கூறும் அவர், இது குறித்து மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவிக்கிறார். இதற்கான மார்க்கெட்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறும் அவர், சந்தை தயார்நிலையை முடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ராயல் என்ஃபீல்ட் புதிய மாடல்களை உருவாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது, இதனால் சர்வதேச போட்டியுடன் போட்டியிட முடியும் என்று ஐச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த் லால் கூறுகிறார்.

Also Read | Mercedes-Maybach GLS 600: மெர்சிடிஸ்-மேபக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் 60,000 கார்களை விற்பனை செய்ய உள்ளது. செக் கார் நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் மிக அதிக அளவில் தனது கார்களை விற்பனை செய்ய முடியும் என்று நம்புகிறது. கோவிட் -19 இன் இரண்டாவது அலை இருந்தபோதிலும், நிறுவனம் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை வழங்கி வருவதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா, 2012 ஆம் ஆண்டில் 34,265 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அடுத்த ஆண்டு குறைந்தது 60,000 யூனிட்டுகளை விற்க நிறுவனம் விரும்புகிறது. வோக்ஸ்வாகன் குரூப் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் செய்யப்படும் கார்களின் விற்பனையும் இதில் அடங்கும்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில், வரலாற்று ரீதியாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அளவில் 35,000 கார்களை விற்பனை செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இலக்கை அடைவோம் என்று தெரிவித்துள்ளார்.

Also Read | ரூ. 50 ஆயிரத்துக்கு மாருதி Wagon R காரை வாங்கலாம் -முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News