பட்ஜெட் விலையில் சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்போன் - ரெடியா மக்களே!

பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2022, 12:51 PM IST
  • சாம்சங்க் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்
  • பட்ஜெட் விலையில் இந்தியாவுக்கு வருகிறது 5ஜி
பட்ஜெட் விலையில் சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்போன் - ரெடியா மக்களே! title=

சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது. புதிய மாடல் Samsung Galaxy A13 5G என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு Galaxy A13 5G அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அறிமுகத்தை சாம்சங்க் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. 

கேலக்ஸி A13 5G விலை

சாம்சங்க் நிறுவனம் புதிய 5ஜி மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானதும் மார்க்கெட்டில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது அந்த கேலக்ஸி ஏ13 விலையை அறிந்து கொள்ள சாம்சங்க் யூசர்களும் ஆர்வமாக உள்ளனர். இப்போது, விலை குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. Galaxy A13 5G ஸ்மார்ட்போனின் 4GB + 64GB மாறுபாட்டின் விலை தோராயமாக 19,400 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இந்திய விலையுடன் ஒப்பிடும்போது ஐரோப்பாவில் 2 ஆயிரம் ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.  4GB + 128GB வேரியண்டின் விலை 19,900 ரூபாய்க்கு விற்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | இந்தியாவில் மீண்டும் வருகிறது TikTok

கேலக்ஸி பியூச்சர்ஸ் 

சாம்சங்க் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் 90Hz புதுப்பிப்பு வீதம், 720 x 1600 பிக்சல் தீர்மானத்தை கொண்டிருக்கும். வாட்டர் டிராப் நாட்ச் உடன் 6.5 இன்ச் HD + LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன் Mali G57 GPU உடன் octa-core MediaTek Dimension 700 செயலியின் கீழ் இயங்கும்.

கேமரா சிறப்பம்சம் 

சாம்சங்க் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 3 பின்புற கேமரா இருக்கும். பிரைமரி கேமரா 50 எம்பி ஷூட்டர் கொண்டிருக்கும். மிக மிக துல்லியமாக புகைப்படம் எடுக்கும் இந்த கேமராகவுக்காக 2MP மேக்ரோ மற்றும் 2MP டெப்த் சென்சார்  லென்ஸ் இருக்கும். செல்பி கேமரா 5MP-யில் இருக்கும்.

Samsung பேட்டரி திறன்

Samsung Galaxy A13 5G ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும். கைபேசியில் சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்திற்காக டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. கைரேகை ஸ்கேனர் உள்ளது. இதன் எடை 195 கிராம் மற்றும் 164.5 x 76.5 x 8.8 மிமீ அளவைக் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க | YouTube: இந்தியாவில் 2002ஆம் ஆண்டின் 3 மாதங்களில் 11 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News