உளவு பார்க்கும் செயலிகளை கண்டுபிடித்து கொடுக்கும் செயலி..! மக்களே தெரிஞ்சுக்கோங்க

உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து வைரஸ் மற்றும் ஆபத்தான செயலிகளை அகற்ற விரும்பினால், சில செயலிகள் மூலம் அதனை எளிமையாக நீக்க முடியும். அந்த குறிப்பிட்ட செயலிகளின் உதவியை பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 8, 2023, 11:23 AM IST
  • மொபைலில் ஆபத்தான வைரஸ் இருக்கிறதா?
  • உங்களை செயலிகள் உளவு பார்க்கிறதா?
  • ஒரே செயலி எளிமையாக கண்டுபிடித்து கொடுத்துவிடும்
உளவு பார்க்கும் செயலிகளை கண்டுபிடித்து கொடுக்கும் செயலி..! மக்களே தெரிஞ்சுக்கோங்க title=

நிச்சயமாக, ஸ்மார்ட்போன்கள் முன்பை விட பாதுகாப்பாக இருக்கின்றன. ஏனென்றால் சிறந்த பிரைவசி பாலிசியை வழங்குகின்றன. இருந்தபோதிலும் அவை ஆபத்தான வைரஸ்களில் இருந்து உங்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை. பல செயலிகளுடன் ஆபத்தான வைரஸ்கள் உங்கள் தொலைபேசியை அடைந்து மொபைலுக்குள் மறைந்திருக்கும். இந்த மால்வேர் மூலம், பயனர்கள் பாதிக்கப்படலாம். அவர்களின் தனிப்பட்ட தரவுகளும் திருடப்படலாம். இது போன்ற மால்வேர் உங்கள் போனில் இருக்கலாம். அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு தனியார் ரயில் சேவைக்கு அனுமதியா? தமிழ்நாட்டில் முன்பதிவு? உண்மை என்ன?

தெரியாத இணைப்பைக் (Links) கிளிக் செய்வது அல்லது அங்கீகரிக்கப்படாத இணைய பக்கங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்குவது போன்ற தவறுகள் உங்கள் மொபைலுக்குள் ஆபத்தான வைரஸ்கள் நுழைய வாய்ப்பாக அமைந்துவிடும். பல நேரங்களில், சில செயலிகள் நிறுவிய பின் கூட செயலிகள் பக்கத்தில் தெரிவதில்லை. இதனால் அவற்றை இன்ஸ்டால் செய்ய முடியாது. நீக்கலாம் என்றால் கூட அந்த செயலிகள் எங்கிருக்கிறது என்று பயனர்களால் கண்டுபிடிக்க முடியாது. இத்தகைய செயலிகள் தீங்குவிளைவிக்கும் வைரஸ்கர்கள் மற்றும் உளவு பார்க்கக்கூடியவை. 

அப்படியான சமயத்தில் உங்கள் தொலைபேசியிலிருந்து வைரஸ் மற்றும் ஆபத்தான செயலிகளை அகற்ற, நீங்கள் சிறப்பு செயலிகளின் உதவியைப் பெற வேண்டும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று இந்தக் கருவிகளை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். எடுத்துக்காட்டாக, Malwarebytes பிரபலமான கருவிகளில் ஒன்றாகும். இது தீங்கிழைக்கும் செயலிகளை எளிதாக அகற்ற பயன்படுத்தலாம். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் ஆபத்தான செயலிகளை அது எவ்வாறு கண்டறிகிறது என்பதை பார்க்கலாம்.

- முதலில் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று மால்வேர்பைட்ஸ் அல்லது அதுபோன்ற ஏதேனும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- இதனை மொபைலில் நிறுவியபிறகு, சாதனங்களில் உள்ள குறைபாடுகள் பற்றிய தகவல் உங்களுக்கு வழங்கப்படும், மேலும் நீங்கள் செட்டிங்ஸில் மாற்றங்களைச் செய்ய முடியும்.
- இது தவிர, சாதனத்தில் இருக்கும் செயலிகளை ஸ்கேன் செய்யும் விருப்பத்தைப் பெறுவீர்கள்.
- ஸ்கேன் நவ் என்பதைத் தட்டுவதன் மூலம் நீங்கள் சாதனத்தை ஸ்கேன் செய்ய முடியும். இந்த ஆப்ஸ் நீங்கள் வெளியே பார்க்காத செயலிகளையும் ஸ்கேன் செய்யும்.

எல்லா பயன்பாடுகளையும் ஸ்கேன் செய்த பிறகு, வைரஸ் மற்றும் ஆபத்தான செயலிகளை தானாகவே நீக்கப்பட்டு, அதைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும். நல்ல விஷயம் என்னவென்றால், வைரஸை அகற்றும் செயல்பாட்டில், உங்கள் முக்கியமான தரவு அல்லது பயன்பாடுகள் எதுவும் நீக்கப்படாது.

மேலும் படிக்க | GoPro கேமரா 50% தள்ளுபடி..! யூடியூபர்களுக்கு ஜாக்பாட் - அமேசானில் அதிரடி ஆஃபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News