Taflon coating: காரில் டெஃப்ளான் கோட்டிங் உண்மையில் நன்மை பயக்குமா

காரை கீறல்களில் இருந்து பாதுகாக்க டெஃப்ளான் கோட்டிங் செய்யும் வழக்கம் பலருக்கு உள்ள நிலையில், Teflon கோட்டிங்கின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி  அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2022, 12:03 PM IST
  • டெஃப்ளான் பூச்சு காரை கீறல்களில் இருந்து பாதுகாக்கிறது.
  • கார் நீண்ட காலத்திற்கு புதியது போல் காட்சி தரும்.
  • Taflon பூச்சில் நன்மைகளுடன் சில தீமைகளும் உள்ளன.
Taflon coating: காரில் டெஃப்ளான் கோட்டிங் உண்மையில் நன்மை பயக்குமா title=

கார் கீறல் படாமல் இருக்க மக்கள் பல ஜுகாத்களை செய்து கொண்டே இருக்கிறார்கள். கார் கழுவும் போது கீறல்கள் மற்றும் பல காரணங்களால் காரை பழையதாக மாற்றுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் காரை புதியதாக வைத்திருக்க சிறந்த வழி டெஃப்ளான் கோட்டிங் ஆகும். 

இந்த வகை பூச்சில், உங்கள் காரில் ஒரு இரசாயன மேற்பரப்பு பூசப்படுகிறது. இதன் காரணமாக அதன் மேல் புறத்தில் கீறல்கள் விழாமல் பாதுகாக்கபடுகின்றன. இந்நிலையில் டெஃப்ளான் பூச்சு செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.மேலும் வீட்டில் காரில் டஃப்ளான் பூச்சு எப்படி செய்யலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். 

டெஃப்ளான் பூச்சின் நன்மைகள்

காரின் மீது டெஃப்ளான் கோட்டிங்கைப் பயன்படுத்த விரும்பினால், முதலில் உங்கள் காரை நன்றாக சுத்தம் செய்து, டெஃப்ளான் கோட்டிங்கைப் பூசி 15-20 நிமிடங்களுக்கு காரை அப்படியே விட்டு விடுங்கள். 

சிறந்த வகையில் பூச்சு இருக்க வேண்டும் என்றால், பஃபிங் மெஷின் மூலம் காரை பாலிஷ் செய்து, 30 நிமிடங்களில் உங்கள் காரில் டெஃப்ளான் பூச்சு முழுமையடையும். இந்த செயல்முறையைப் பற்றி உங்களுக்கு அதிக போதிய அறிவு இல்லையென்றால், டெஃப்ளான் பூச்சு ஒரு நிபுணரின் உதவியுடன் செய்யலாம். இந்த பூச்சு காரை சிறிய கீறல்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதன் மீது தண்ணீரை தேங்காது. அதனால் நீர் கரை ஏற்படாது. 

மேலும் படிக்க | 16 எம்பி செல்பி கேமரா மோட்டோரோலாவின் விலை இவ்வளவு தானா.!

காரைக் கழுவிய பின் தங்கியிருக்கும் நீர் கறைகள் அதிலிருந்து விடுபடுகின்றன. இது தவிர, காரின் பளபளப்பும் நீண்ட காலம் இருக்கும், மேலும் அதை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. வாகனத்தின் அளவைப் பொறுத்து, டெஃப்ளான் கோட்டிங் செய்ய ரூ.5,000 முதல் 7,000 வரை செலவழிக்க வேண்டும்.

டெஃப்ளான் அதிக சேதத்தை ஏற்படுத்தாது  என்பதால், எந்த சந்தேகமும் இல்லாமல் நீங்கள் அதை காரில் நிறுவலாம். ஆனால் Teflon coating என்பது Dupont கம்பெனியின் பதிவு செய்யப்பட்ட காப்புரிமை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காப்புரிமை இந்தியாவில் Shamers India நிறுவனத்திற்கு உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 

இது தவிர, ஒர்க்ஷாப்பில் காரை வேக்ஸ் பாலிஷ் செய்த பிறகு, வாடிக்கையாளரிடம் டெஃப்ளான் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது எனக் கூறும் சம்பவங்களும் உள்ளன. அது உண்மையில் டெஃப்ளான் கோட்டிங் இல்லை. அது உங்களை ஏமாற்றும் செயல். 

பாலிஷ்கள் மற்றும் மெழுகுகள் காருக்கு பிரகாசத்தை மட்டுமே சேர்க்கின்றன. அவை கீறல்களிலிருந்து பாதுகாக்காது. காரில் டெஃப்ளான் இருக்கிறதா இல்லையா என்பது கூட பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்குத் தெரிவதில்லை. எனவே இங்கே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டெஃப்லான் பூச்சு  செய்யப்பட்டதா இல்லௌயா என்பதை பல வழிகளில் சோதிக்கலாம். டெஃப்ளான் பூச்சு 260 டிகிரி வெப்பநிலையிலும் தாங்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Tata Neu: வந்துவிட்டது டாடாவின் சூப்பர் ஆப், குஷியில் பயனர்கள், கலக்கத்தில் பிற ஆப்-கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News