ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து புதிய ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் பிரியர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜை புதன்கிழமை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. குறிப்பிட்ட சில ரீசார்ஜ் பிளான்களில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 3 மாதங்களுக்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை பெறலாம்.
இது தவிர, வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களில் அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் பிற நன்மைகளையும் பெறுவார்கள். டிஸ்னி + ஹாட்ஸ்டார் மூலம் பயனர்கள் திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளை முற்றிலும் இலவசமாகப் பார்க்க முடியும். புதன்கிழமை மாலை ஜியோ வெளியிட்ட புதிய அறிவிப்பில், ஹாட்ஸ்டார் பார்க்க வேண்டும் என்றால், புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டங்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் ரீச்சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Jio Vs Airtel Vs Vi: ரூ.250 ப்ரீபெய்ட் திட்டத்தில் அசத்தும் நிறுவனம் எது
ஜியோ கிரிக்கெட் பிளான் ரூ.333
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இதனை தனக்கான மார்க்கெட்டாக பயன்படுத்த புதிய பிளானை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. ஜியோ கிரிக்கெட் பிளான் என்ற பெயரில் 333 ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும். நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, அன்லிமிட்டெட் குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ ஆப்ஸின் சந்தாவும் இலவசமாகக் கிடைக்கும்.
இதேபோல், 583 ரூபாய் மற்றும் 783 ரூபாய் திட்டங்களிலும் ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும். இரண்டின் வேலிடிட்டி முறையே 56 மற்றும் 84 நாட்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்களிலும் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இன்னும் பல திட்டங்களில் Disney + Hotstar சந்தாவையும் வழங்குகிறது. ரூ.499, ரூ.555, ரூ.601, ரூ.799, ரூ.1066, ரூ.1,499 மற்றும் ரூ.4,199 திட்டங்களிலும் ஹாட்ஸ்டாரை கண்டு ரசிக்கலாம்.
மேலும் படிக்க | ஜியோவை தொடர்ந்து அசத்தலான Disney+ Hotstar பிளான்களை கொண்டுவந்த ஏர்டெல்: விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR