பிரபல அரசியல்வாதிகள் அதிக விரும்பும்... சில SUV கார்கள் இவை தான்...!

இந்தியாவில் சமீப காலமாக அதிக இருக்கைகள், அதிக வசதிகள் கொண்ட கார் மாடல்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல பிரபலமான பிராண்ட்களும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2024, 05:43 PM IST
  • அதிக இட வசதி மற்றும் அதிக இருக்கைகள் கொண்ட SUV கார்கள் விற்பனை தற்போது அதிகரித்து வருகிறது.
  • அரசியல்வாதிகள் அதிகம் விரும்பும் SUV கார்கள்.
  • இந்தியர்களின் கவனம் எஸ்யுவி கார்களின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது.
பிரபல அரசியல்வாதிகள் அதிக விரும்பும்... சில SUV கார்கள் இவை தான்...! title=

இந்தியாவில் சமீப காலமாக அதிக இருக்கைகள், அதிக வசதிகள் கொண்ட கார் மாடல்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல பிரபலமான பிராண்ட்களும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். முன்பு ஹேட்ச்பேக் ரக கார்களே அதிகம் விற்பனையாகும் கார் பிரிவாக இருந்த நிலையில், தற்போது இந்தியர்களின் கவனம் எஸ்யுவி கார்களின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது.

அரசியல்வாதிகள் அதிகம் விரும்பும் SUV கார்கள்

இந்திய அரசியல்வாதிகள் ஆடம்பரமான ஸ்டைலான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள், கார்களை தேர்தெடுக்கும் போது, மிகவும் பெயர் பெற்ற பிராண்டுகளையே தேர்தெடுக்கின்றனர். வெளிநாட்டு பிராண்டுகளின் விலையுயர்ந்த கார்களை அவரது கேரேஜில் காணலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் உள்நாட்டு SUV பிராண்டுகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. 

பல அரசியல்வாதிகள் டாடா, மஹிந்திரா மற்றும் கியா போன்ற இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் எஸ்யூவிகளை அதிகம் விரும்புகிறார்கள்.  அதிக  இட வசதி மற்றும் அதிக இருக்கைகள் கொண்ட SUV கார்களைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன:

பாதுகாப்பு:

SUV வகை கார்கள் உறுதியானவை மற்றும் பாதுகாப்பானவை. பாதுகாப்பு அம்சம் அரசியல்வாதிகளுக்கு முக்கியமானது.

ஸ்டேட்டஸ்: 

SUV கார்கள், ஸ்டேட்டஸ் என்பது நமது வாழ்க்கை தரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது அரசியல்வாதிகள் மத்தியில் பிரபலமான பிராண்டுகளின் SUV கார்கள் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளன.

வசதி:

SUV கார்கள் அதிக இட வசதி கொண்டவை மற்றும் பயணிக்கவும் வசதியானவை. நீண்ட பயணங்களுக்கு ஏற்றவை.

மேலும் படிக்க | BSNL வழங்கும் ரூ.300-க்கும் குறைவான ப்ரீபெய்ட் பிளான்கள்... போர்ட் செய்வது எப்படி..!!

அரசியல்வாதிகளின் பர்ஸ்ட் சாய்ஸாக உள்ள சில பிரபலமான உள்நாட்டு எஸ்யூவி கார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

மஹிந்திரா XUV700 (Mahindra XUV700)

மஹிந்திரா XUV700 என்பது அதன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பிற்காக பிரபலமான SUV ஆகும். இது ஓட்டுநர்கள் பணியை எளிதாக்கும் பல உதவி அமைப்புகளைக் கொண்டுள்ளது. இது அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பான தேர்வாக அமைகிறது.

டாடா ஃபார்ச்சூனர் (Tata Fortuner)

டாடா ஃபார்ச்சூனர் இந்தியாவில் மிகவும் பிரபலமான எஸ்யூவி வகை கார்களில் ஒன்றாகும். இது 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி காரான இதில்  சக்திவாய்ந்த எஞ்சின், வசதியான உட்புற வடிவமைப்பு மற்றும் பல சிறப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றது.

கியா செல்டோஸ் (Kia Seltos)

கியா செல்டோஸ் ஒரு சிறிய எஸ்யூவி மிகவும் ஸ்டைலான வடிவமைப்பிற்காக அறியப்படுகிறது. அதே சமயத்தில் ஒப்பீட்டளவில், விலையும் குறைவு. சிறந்த அம்சங்கள் நிறைந்த சிறிய எஸ்யூவி வாங்க விரும்பும் அரசியல்வாதிகளுக்கு இது முதல் சாய்ஸ் ஆக உள்ளது

அனைத்து அரசியல்வாதிகளும் உள்நாட்டு எஸ்யூவி வகைகளை வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் இன்னும் வெளிநாட்டு பிராண்டுகளின் கார்களை விரும்புகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில், உள்நாட்டு எஸ்யூவிகள் விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. மேலும் அவை வரும் ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மத்தியில் மிகவும் விருப்பமான தேர்வாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை... அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையில் மலிவாக வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News