வியாழன் கிரகத்தில் பிளாஷ்லைட்! அரிய நிகழ்வை உறுதி செய்த வானியலாளர்கள்

Powerful impacts into Jupiter: ஜப்பானிய அமெச்சூர் வானியலாளர் வியாழனின் வளிமண்டலத்தில் பிரகாசமான ஒளியை படம் பிடித்தார். அரிய நிகழ்வை தொலைநோக்கியாலும் பார்க்க முடியாது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2023, 03:43 PM IST
  • அமெச்சூர் வானியலாளர்களின் கண்டுபிடிப்பு
  • வியாழனின் வளிமண்டலத்தில் பிரகாசமான ஒளி
  • படம் பிடித்த அமெச்சூர் வானியலாளர்
வியாழன் கிரகத்தில் பிளாஷ்லைட்! அரிய நிகழ்வை உறுதி செய்த வானியலாளர்கள் title=

டோக்கியோ: வியாழன் கிரகத்தில் சக்திவாய்ந்த தாக்கங்கள் மிகவும் அரிதானவை என்றாலும், அவை அவ்வப்போது நிகழ்கின்றன
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) தி நியூயார்க் டைம்ஸின் (NYT) அறிக்கையின்படி, ஜப்பானில் உள்ள ஒரு அமெச்சூர் வானியலாளர் வியாழனின் வளிமண்டலத்தில் ஒரு பிரகாசமான ஃபிளாஷ் ஒன்றைப் பிடித்தார், இது விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

அதை அடுத்து, விஞ்ஞானிகள் வியாழன் கோள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அடையாளம் தெரியாத வானியலாளர் ஒருவர், கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டாக்டர் கோ அரிமட்சு (Dr Ko Arimatsu, an astronomer at Kyoto University) அவர்களுக்கு, வியாழன் கிரகம் தொடர்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். மின்னஞ்சலைப் பெற்றவுடன், டாக்டர் அரிமட்சு மேலும் தகவல் தேவை என்று கேட்டுக் கொண்டார் என்று  தி நியூயார்க் டைம்ஸின் (NYT) அறிக்கை கூறுகிறது.

ஆகஸ்ட் 28ம் தேதியன்று, விஞ்ஞானி அரிமட்சு, வியாழன் கிரகம் தொடர்பான ஃபிளாஷ் பற்றிய மேலும் ஆறு தரவுகளைப் பெற்றார், இது வியாழன் கிரகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்டதில் மிகவும் பிரகாசமான ஒன்றாகும். வியாழனின் வளிமண்டலத்தை பாதிக்கும் சூரிய மண்டலத்தின் விளிம்புகளில் இருந்து வரும் சிறுகோள்கள் அல்லது வால்மீன்களால் இது போன்ற ஃப்ளாஷ்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேம்பட்ட தொலைநோக்கிகள் மூலம் கூட, இவற்றை நேரடியாகக் கண்காணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று இது தொடர்பாக ஒரு மின்னஞ்சல் செய்தியில் வானியலாளர் அரிமட்சு கூறினார். வியாழனின் ஈர்ப்பு இந்த பொருள்களை ஈர்க்கிறது, அவை இறுதியில் கிரகத்தில் மோதுகின்றன, அவற்றை நேரடியாகப் படிக்க இது ஒரு தனித்துவமான மற்றும் விலைமதிப்பற்ற கருவியாக அமைகிறது என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | சந்திரயான் 3 நிலவில் என்ன செய்யப்போகிறது? அடுத்தகட்டம் என்ன?

முந்தைய தாக்கங்கள்
NYT அறிக்கையின்படி, வியாழனில் சக்திவாய்ந்த தாக்கங்கள் தற்போது மிகவும் அரிதானவை, ஆனால் அவை நிகழ்கின்றன. 1994 ஆம் ஆண்டில், ஒரு வால்மீன், வியாழன் கிரகத்தை மிகவும் சக்தியுடன் தாக்கியது, அது கண்களுக்கு புலப்படகூடிய குப்பைகளை விட்டுச் சென்றது. 2009 இல் மற்றொரு தாக்கம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2010 முதல் வியாழனில் காணப்படும் ஒன்பது ஃப்ளாஷ்களில் எட்டு அமெச்சூர் வானியலாளர்களால் தெரிவிக்கப்பட்டது என்று டாக்டர் அரிமட்சு கூறினார். சிறிய அளவிலான வானியல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஏனென்றால், சிறிய அளவில் செய்யப்படும் முயற்சிகளே, மிகப் பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வித்தாகிறது.

வானியலாளர்களின் ஆரம்ப பகுப்பாய்வுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான ஃப்ளாஷ், சைபீரியாவில் 1908 துங்குஸ்கா வெடிப்புக்கு ஒப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது ஆகும், இது 800 சதுர மைல் காடுகளைத் தாக்கிய ஒரு சிறுகோள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெச்சூர் வானியல் என்பது ஒரு பொழுதுபோக்காகும் , இதில் பங்கேற்பாளர்கள் வானத்தில் உள்ள வானப் பொருட்களை வெற்று கண்கள், தொலைநோக்கிகளை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் பார்த்து மகிழ்வார்கள் . விஞ்ஞான ஆராய்ச்சி அவர்களின் முதன்மை இலக்காக இல்லாவிட்டாலும், சில அமெச்சூர் வானியலாளர்கள் (Amature Astronomer) குடிமக்கள் அறிவியலில் பங்களிப்பு செய்கிறார்கள்.

மேலும் படிக்க | நிலவில் மனிதர்கள் வாழலாம்.... சந்திரயான்-3  கொடுத்துள்ள முக்கிய தகவல்!

(ஏஜென்சிகளின் உள்ளீடுகளுடன்)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News