NADA India மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார் கிரேன் ரிஜிஜு!

விளையாட்டு வீரர்களுக்கும் - தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கும் (NADA) இடையே ஒரு பாலத்தை உருவாக்கும் நோக்கில், மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு செவ்வாயன்று நாடா இந்தியாவின் (NADA India) மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.

Last Updated : Jun 30, 2020, 07:04 PM IST
  • பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மருந்தில் NADA-வால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு பொருளும் உள்ளதா என்பது பற்றிய முழுமையான தகவல்களும் பயன்பாட்டில் கிடைக்கும்
  • விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகளை தீர்மானிக்க இந்த செயலி உதவும்
NADA India மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார் கிரேன் ரிஜிஜு! title=

விளையாட்டு வீரர்களுக்கும் - தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கும் (NADA) இடையே ஒரு பாலத்தை உருவாக்கும் நோக்கில், மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு செவ்வாயன்று நாடா இந்தியாவின் (NADA India) மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.

இந்த பயன்பாடானது விளையாட்டின் பல்வேறு அம்சங்கள் மற்றும் மிக முக்கியமாக தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பற்றி எளிதில் அணுகக்கூடிய தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கவனக்குறைவான பயன்பாடு தடகள வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

READ | ரோகித் ஷர்மாவுக்கு பெண் வேடமிட்டால் எப்படி இருக்கும்...? நீங்களே பாருங்கள்!...

செயலினை அறிமுகம் செய்த அமைச்சர் ரிஜிஜு, நிறுவனத்தில் முன்முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, சுத்தமான விளையாட்டைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு மிக முக்கியமான படியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "இது இந்திய விளையாட்டுக்கு மிக முக்கியமான படியாகும், ஏனென்றால் நாங்கள் சுத்தமான விளையாட்டுகளை நோக்கி செயல்பட்டு வருகிறோம், அந்த திசையில் முதல் படி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு விளையாட்டு வீரர்களுக்கு பொருத்தமான, அணுகக்கூடிய தகவல்களை வழங்குவது ஆகும். இந்த செயலி மூலம் எந்த மருந்து அல்லது பொருட்கள் விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படக்கூடாது என்று எச்சரிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

"இந்த பயன்பாட்டின் மூலம், தடகள வீரர்கள் தங்களுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை சரிபார்க்க முடியும், மேலும் உதவிக்காக வேறு யாரையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. நமது பிரதமரின் டிஜிட்டல் கனவை நிறைவேற்ற மற்றொரு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

READ | ரோஹித் ஷர்மாவை தனது விருப்பமான பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்தார் டுமினி!...

பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மருந்தில் NADA-வால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு பொருளும் உள்ளதா என்பது பற்றிய முழுமையான தகவல்களும் பயன்பாட்டில் கிடைக்கும், எனவே விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகளை தீர்மானிக்க இந்த செயலி உதவும். விளையாட்டு வீரர்களுக்கான டோப் சோதனைகளின் மென்மையான, விரைவான செயல்முறையை உறுதிசெய்ய, பயன்பாட்டின் மூலம் ஒரு சோதனையை நடத்துவதற்கு டோப்பிங் கட்டுப்பாட்டு அதிகாரியின் இருப்பை பதிவு செய்ய பயன்பாடு அனுமதிக்கிறது.

இந்த மொபைல் பயன்பாட்டின் அறிமுக விழாவில் விளையாட்டு துறை செயலாளர் ரவி மிதல் மற்றும் NADA-வின் இயக்குநர் ஜெனரல் நவீன் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Trending News