Used Cars: 4 லட்சம் ரூபாயில் கிடைக்கும் சூப்பர் சிஎன்ஜி கார்கள்

Second Hand CNG Cars: சிஎன்ஜி செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்க விரும்புகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2023, 06:21 PM IST
  • செகண்ட் ஹேண்ட் சிஎன்ஜி கார் வாங்க எப்போதும் வாகன ஓட்டிகளிடையே டிமாண்ட் இருக்கிறது.
  • ஃபாக்டரி ஃபிட் சிஎன்ஜி கிட் கொண்ட காரை மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • வெளியில் இருந்து சிஎன்ஜி கிட் நிறுவப்பட்ட கார்களை நம்ப முடியாது.
Used Cars: 4 லட்சம் ரூபாயில் கிடைக்கும் சூப்பர் சிஎன்ஜி கார்கள் title=

செகண்ட் ஹேண்ட் சிஎன்ஜி கார்கள்: சிஎன்ஜி கார்கள் நல்ல மைலேஜ் தருவதால், செகண்ட் ஹேண்ட் சிஎன்ஜி கார் வாங்க எப்போதும் வாகன ஓட்டிகளிடையே டிமாண்ட் இருக்கிறது. நீங்களும் சிஎன்ஜி செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்க விரும்புகிறீர்களா? அப்படியானால், ஃபாக்டரி ஃபிட் சிஎன்ஜி கிட் கொண்ட காரை மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வெளியில் இருந்து சிஎன்ஜி கிட் நிறுவப்பட்ட கார்களை நம்ப முடியாது. கிட் சரியாக நிறுவப்பட்டுள்ளதா இல்லையா என்ற சந்தேகம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

சிஎன்ஜி கிட் சரியாக நிறுவப்படவில்லை, அல்லது அது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாருதி சுசுகி ட்ரூ வேல்யூ இணையதளத்தில் சில சிஎன்ஜி கார்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை ரூ.4 லட்சம் முதல் விற்பனைக்கு கிடைக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள இந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ (2016 மாடல்) மொத்தமாக 58770 கிமீ பயணித்துள்ளது. இது பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் சிஎன்ஜி கிட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.4 லட்சம் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கார் லக்னோவில் விற்பனைக்கு உள்ளது. இது தற்போது முதல் உரிமையாளர் வாகனமாக உள்ளது.

மேலும் படிக்க | Royal Enfield: அதிரடி விற்பனை செய்து சாதனை, அதிகமாக வாங்கும் கஸ்டமர்ஸ்

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள மற்றொரு மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ (2016 மாடல்) 75710 கிமீ பயணித்துள்ளது. இதிலும் பெட்ரோல் எஞ்சினுடன் சிஎன்ஜி கிட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான விலையும் ரூ.4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புனேவில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த கார் முதல் உரிமையாளர் காராகும்.

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள மற்றொரு மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ (2017 மாடல்) 21719 கிமீ தூரம் மட்டுமே பயணித்துள்ளது. இந்த கார் பெட்ரோல் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி கிட் உடன் வருகிறது. இதற்கும் ரூ.4 லட்சம் விலை கேட்கப்படுகிறது. இந்த கார் இந்தோரில் விற்பனைக்கு உள்ளது. ஆனால் இது இரண்டாவது உரிமையாளர் கார் ஆகும்.

மற்றொரு மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ (2017 மாடல்) 82240 கிமீ பயணித்துள்ளது. இதிலும் சிஎன்ஜி கிட் உள்ளது. இதற்கும் ரூ.4.05 லட்சம் கேட்கப்படுகிறது. இது குருகிராமில் (குர்கான்) விற்பனைக்கு கிடைக்கிறது. இது முதல் உரிமையாளர் கார் ஆகும்.

(குறிப்பு: நாங்கள் யாரையும் பயன்படுத்திய காரை வாங்க பரிந்துரைக்கவில்லை. இந்தக் கட்டுரை தகவலுக்காக மட்டுமே.)

மேலும் படிக்க | ஷாங்காய் ஆட்டோ ஷோ 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொகுசு கார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News