Vivo Mobile: 44MP செல்ஃபி கேமராவுடன் வெளியான புதிய விவோ மொபைல்

Vivo Y75 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2022, 02:58 PM IST
  • விவோ ஒய்75 போனின் விவரக்குறிப்புகள்
  • விவோ ஒய்75 போனில் சலுகைகள் உள்ளது
  • முன்பக்கத்தில் 44எம்பி ஐ ஆட்டோஃபோக்ஸ் கேமரா
Vivo Mobile: 44MP செல்ஃபி கேமராவுடன் வெளியான புதிய விவோ மொபைல் title=

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியாவில் புதிய ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போனான விவோ ஒய்75 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் 44 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் சூப்பர் நைட் ரியர் கேமரா உள்ளது. விவோவின் புதிய போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் கொண்ட அல்ட்ரா-லைட்வெயிட் டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஒய்75 போனின் விலை ரூ.25,999 ஆகும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் 19 சதவீதம் சலுகை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, 20,999 ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம். அதேபோல் விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி சலுகையும் உள்ளது. இதன் மூலம் இதில் ரூ.1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை 31 மே 2022 வரை இயங்கும். மேலும் இந்த போனை பிளிப்கார்ட் மற்றும் விவோ ஸ்டோர் மூலம் வாங்கலாம்.

மேலும் படிக்க | அமேசான் அட்டகாச சலுகை; பாதி விலையில் புதிய டிவியை வாங்கலாம் 

விவோ ஒய்75 போனின் விவரக்குறிப்புகள்
விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே உள்ளது. காட்சியின் ரெஜால்யூஷன் 2400×1080 பிக்சல்கள் ஆகும். மீடியாடெக் ஹீலியோ ஜி96 செயலி இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன் டச் ஓஎஸ் 12 இந்த போனில் கிடைக்கிறது. போனில் பவர் பேக்கப்பிற்காக 4050எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது 44 வாட் ஃபிளாஷ் சார்ஜை ஆதரிக்கிறது. அதன் உதவியுடன், தொலைபேசியை நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். 30 நிமிடங்களில் ஃபோனை பூஜ்ஜியத்திலிருந்து 65 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும். 

கேமரா பற்றி பேசுகையில் விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கேமரா 50 மெகாபிக்சல்கள். 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ லென்ஸ் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோவுக்காக போனின் முன்பக்கத்தில் 44எம்பி ஐ ஆட்டோஃபோக்ஸ் கேமரா உள்ளது. அல்ட்ரா-வைட் நைட், ஏஐ எக்ஸ்ட்ரீம் நைட், டபுள் எக்ஸ்போஷர் மற்றும் வீடியோ ஃபேஸ் பியூட்டி போன்ற அம்சங்களும் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளன.

விவோ ஒய்75 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்
- 6.44-இன்ச் முழு எச்டி+ அமோல்டு டிஸ்ப்ளே
– மீடியா டெக் ஹீலியோ ஜி96 செயலி
– 44எம்பி ஏஎஃப் செல்ஃபி கேமரா
– 50 எம்பி சூப்பர் நைட் பிரைமரி கேமரா
- 4050எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

மேலும் படிக்க | Oppo போனை இதைவிட குறைவாக வாங்க முடியாது: அமேசானில் அதிரடி தள்ளுபடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News