WhatsApp Blocked: வாட்ஸ் அப் பிளாக்கை கண்டுபிடிக்க எளிதான வழி

மற்றவர்கள் உங்களை வாட்ஸ் ஆப்பில் பிளாக் செய்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க சூப்பரான 5 வழிகள் இருக்கின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2022, 01:13 PM IST
  • வாட்ஸ் அப் பிளாக்கை கண்டுபிடிக்க டிப்ஸ்
  • ஸ்மார்டாக யோசித்து எளிதாக கண்டுபிடியுங்கள்
WhatsApp Blocked: வாட்ஸ் அப் பிளாக்கை கண்டுபிடிக்க எளிதான வழி title=

வாட்ஸ் அப்பில் யூசர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பிளாக் செய்துவிடலாம். iOS மற்றும் Android என இரண்டு தளங்களில் இயங்கும் வாட்ஸ்ஆப்களும் இந்த ஆப்சனை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கியுள்ளது. நீங்கள் யாரேனும் ஒருவரை பிளாக் செய்தாலோ? அல்லது உங்களை யாரேனும் ஒருவர் பிளாக் செய்தாலோ எளிதாக கண்டுபிடித்துவிடலாம். 5 வழிகளில் உங்களை ஒருவர் பிளாக் செய்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியும். 

1. ஆன்லைன்

ஒருவர் கடைசியாக ஆன்லைனில் எப்போது இருந்தார் என்பதை, தொடர்பில் இருப்பவர்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்றால் அந்த தகவல் உங்களுக்கு காட்டாது. அதேநேரத்தில் இதை மட்டும் வைத்து ஒருவர் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என்பதை சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஆன்லைனில் இருக்கும் தகவலை ஒருவர் வாட்ஸ்அப்பில் ஆப் செய்து வைத்துக் கொள்ளும் ஆப்சனும் இருக்கிறது. 

மேலும் படிக்க | ஒரே போனில் 2-2 WhatsApp மற்றும் Instagram பயன்படுத்த டிப்ஸ்

2. புரொபைல் பிக்சர்

உங்களுடைய வாட்ஸ் ஆப்பில் ஒருவரின் புரொபைல் பிக்சர் காண்பிக்கப்படவில்லை என்றால், நீங்கள் அவர்களால் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். புதிய நபர் என்றால், அவர் உங்களின் எண்ணை சேமிக்கும் வரை புரோபைல் பிக்சர் காட்டாது. 

3. மெசேஜ் செல்லாது

நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்டவர்களுக்கு செய்தி அனுப்பும்போது அது சென்று சேராது. இணையம் இல்லாமல் இருந்தாலும் நீங்கள் அனுப்பும் மெசேஜ் சேராது என்பது இருந்தாலும், மேற்கூறிய விஷயங்களும் ஒத்துப்போனால், பிளாக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.  

4. குரல் அழைப்பு

வாட்ஸ்அப் வாய்ஸ் கால்களை நீங்கள் மேற் கொள்ளுங்கள். நீங்கள் மேற்கொள்ளும் வாட்ஸ் அப் வாய்ஸ் கால் அவர்களுக்கு செல்லவில்லை என்றால், அவர் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என கிட்டதட்ட உறுதி செய்து கொள்ளலாம். இணையம் இல்லாமல் இருந்தால் மட்டும் அவருக்கு அழைப்பு செல்லாது. 

5. புதிய குழு

இந்த முயற்சி கிட்டதட்ட ஒருவர் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என்பதை தெளிவாக காட்டிவிடும். நீங்கள் புதிய குழு ஒன்றை உருவாக்க முயற்சி செய்யுங்கள். அந்தக் குழுவில் அவரை உங்களால் சேர்க்க முடியவில்லை என்றால், அந்த நபர் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | WhatsApp Payments: திடீரென அதிகரிக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட் பரிவர்த்தனைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News