Vivo T3 Lite 5G Price Discount Specifications: Vivo ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் விற்பனையை முன்பு ஆன்லைனில் இல்லாமல் ஆப்லைனிலேயே வைத்திருந்தது. 2022ஆம் ஆண்டு முதல்தான் Vivo நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் கால் பதிக்க தொடங்கியது. அந்த வகையில், தற்போது மிகக் குறைந்த பட்ஜெட் விலையிலான 5ஜி ஸ்மார்ட்போனை Vivo அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தாண்டின் தொடக்கத்தில் Vivo T3 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் கச்சிதமான டிசைன், இரட்டை அமைப்பு கேமரா, தண்ணீர்பட்டாலும் பயன்படுத்த இயலும் எல்சிடி டிப்ஸ்ளே, IP64 ரேட்டிங் என பல அம்சங்களை அதுகொண்டிருந்தது. இந்நிலையில், அதன் லைட் வெர்ஷனாக Vivo T3 Lite 5G தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
Vivo T3 Lite 5G: சிறப்பம்சங்கள்
இது மிக குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும். தற்போது அறிமுகச் சலுகையாக சில தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த மொபைல் குறித்த சிறப்பம்சங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். Vivo T3 Lite 5G மொபைல் இரண்டு வேரியண்டில் வருகிறது. பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் இந்த மொபைல் கிடைக்கிறது. Vivo T3 Lite 5G மொபைல் இந்திய சந்தையில் Motorola G34 5G, Samsung Galaxy F15, Samsung Galaxy M15, Poco M6 Pro, Realme 12x 5G, Redmi 13C 5G உள்ளிட்ட மற்ற ஸ்மார்ட்போன்களுடன் கடுமையாக போட்டியிடும்.
மேலும் படிக்க | 2 நாள்கள் முழுசா யூஸ் பண்ணலாம்... 9 ஆயிரத்திற்கும் குறைவாக முரட்டு Realme மொபைல்!
Vivo T3 Lite 5G: கேமரா
Vivo T3 Lite 5G மொபைல் மொத்தம் 185 கிராம் எடை கொண்டதாகும். 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே இதில் உள்ளது. மேலும் இந்த எல்சிடி பேனல் டிஸ்ப்ளே 1612 x 720 பிக்சல் ரெஸ்சோல்யூஷன் மற்றும் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டது. இதில் இரட்டை அமைப்பு கேமரா உள்ளது. 50MP மெயின் லென்ஸ் Sony AI சென்சார் கொண்டது, 2MP டெப்த் சென்சார் கொண்டது. முன்பக்கத்தில் செல்ஃபி 8MP கேமரா உள்ளது. மேலும் கேமராவில் பல அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் புதிய MediaTek Dimensity சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Dimensity 6300 ஆக்டா கோர் சிப்செட் 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் RAM 6ஜிபிக்கு நீட்டித்துக்கொள்ளலாம். 5000mAh பேட்டரி உடன் வருகிறது. 15W பிளாஷ் சார்ஜர் கொடுக்கப்டுகிறது.
Vivo T3 Lite 5G: விலையும், தள்ளுபடியும்...
இந்த மொபைலின் விலையை பார்த்தோமானால், 4ஜிபி RAM + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 10 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். 6ஜிபி RAM + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 11 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். ஹெச்டிஎப்சி வங்கி கார்டு மூலம் வாங்கினால் 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதனால், இந்த மொபைல்களை நீங்கள் 9 ஆயிரத்து 999 ரூபாய்க்கு மற்றும் 10 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த மொபைலை நீங்கள் பிளிப்கார்டில் வாங்கலாம். ஆனால் இந்த மொபைலின் விற்பனை வரும் ஜூலை 4ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். அதுவரை காத்திருக்கவும்.
மேலும் படிக்க | OnePlus Nord CE 4 Lite மொபைலுக்கு இவற்றையும் வாங்கலாம் - மாற்று ஸ்மார்ட்போன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ