எச்சரிக்கை!! உடனடியாக வாட்ஸ் ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள்!!

வாட்ஸ்ஆப் பயனாளர்களும் உடனடியாக தங்கள் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்யுது கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: May 14, 2019, 05:06 PM IST
எச்சரிக்கை!! உடனடியாக வாட்ஸ் ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள்!!
File photo

டெல்லி: இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு பாதிப்பு ஏற்பட்டதால், மொபைல்போன்கள் ஸ்பைவேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வாட்ஸ்ஆப் பயனாளர்களும் உடனடியாக தங்கள் வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்யுது கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அப்படி வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்யும் பட்சத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்ப்படாது எனவும் தெரிவிக்கபட்டு உள்ளது. சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் வாட்ஸ்ஆப் செயலிக்கு ஒரு மிஸ்ட் கால் செய்து வாட்ஸ்ஆப் கணக்குகளை தாக்கியுள்ளனர். இந்த சைபர் தாக்குதலால் எத்தனை பேர் பாதித்துள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை என பேஸ்புக்-ன் துணை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைனான்சியல் டைம்ஸ் (Financial Times) பத்திரிக்கையின் தகவல்படி, இந்த தாக்குதலுக்கு பின் இருப்பது இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. (NSO) என்ற அமைப்பு நடத்தியுள்ளாதாக தெரிவித்துள்ளது.

இந்த பிரச்னைக்கான தீர்வை குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. விரைவில் இதற்கான அப்டேட்டை வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.