விண்ணில் சீறிப் பாய்ந்தது RISAT-2BR1 கண்காணிப்பு செயற்கைக்கோள்!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது RISAT-2BR1 கண்காணிப்பு செயற்கைக்கோள்!

Last Updated : Dec 11, 2019, 03:36 PM IST
விண்ணில் சீறிப் பாய்ந்தது RISAT-2BR1 கண்காணிப்பு செயற்கைக்கோள்! title=

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது RISAT-2BR1 கண்காணிப்பு செயற்கைக்கோள்!

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர்1 (RISAT - 2BR1) செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

628 கிலோ எடைகொண்ட ரிசாட் 2பிஆர்1 செயற்கைக்கோளில் உள்ள நவீன ரேடார் மூலம் துல்லியமாக பூமியைப் படம்பிடிக்க முடியும் என்பதால் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். அதன் வாயிலாக கிடைக்கும் தரவுகள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.

2009 ஆம் ஆண்டில் ரிசாட்-2, 2012ல் ரிசாட்-1, கடந்த மே மாதம் ரிசாட் 2பி ஆகியவை அனுப்பப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. ரிசாட் 2 பிஆர்1 செயற்கைக்கோளுடன் வணிக ரீதியில் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள்கள் என 10 செயற்கை கோள்கள் செலுத்தப்பட உள்ளன. ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இது பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டின் 50-வது திட்டம் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது RISAT-2BR1 கண்காணிப்பு செயற்கைக்கோள்.  

 

Trending News