Xiaomi Civi ஸ்மார்ட்போன்: அற்புதமான டிசைன், வலுவான பேட்டரி

Xiaomi நிறுவனம் Xiaomi CIVI ஸ்மார்ட்போனை நாளை அறிமுகப்படுத்த உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 26, 2021, 02:10 PM IST
Xiaomi Civi ஸ்மார்ட்போன்: அற்புதமான டிசைன், வலுவான பேட்டரி title=

புதுடெல்லி: Xiaomi நிறுவனம் Xiaomi CIVI ஸ்மார்ட்போனை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த போனின் அம்சங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. புதிய டீசரில் சிப்செட் மற்றும் பேட்டரி திறன் தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வ Xiaomi Weibo கணக்கின் படி, வரவிருக்கும் Xiaomi CIVI குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி மூலம் இயக்கப்படும். Xiaomi 11 Lite NE 5G மற்றும் பிற பிராண்டுகளின் பல இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களில் அதே சிப் உள்ளது.

Mi 11 Lite 5G (Mi 11 Youth Edition) ஸ்மார்ட்போனில் (Xiaomi) உள்ள ஸ்னாப்டிராகன் 780 ஜி-யை விட ஸ்னாப்டிராகன் 778 ஜி ஆனது திறன் குறைந்தது என்பது ஒருபக்கம், Xiaomi CIVI ஸ்மார்ட்போன் 36 மாதங்களுக்கு ஒரு மென்மையான அனுபவத்தை அளிக்கும். மேலும், நிறுவனம் இது 4,500 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்பதையும் உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் (Mobile Phone) அளவீட்டில் 6.98 மிமீ தடிமன் மற்றும் எடையில் 166 கிராம் இருக்கும். ஏறக்குறைய ஒரே மாதிரியான Mi 11 லைட் தொடர் அளவீடுகளை கொண்டுள்ளது ஆனால் சற்று சிறிய 4,250mAh பேட்டரியை பெறுகிறது.

ALSO READ: Mi Sale: 16 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியில் பெறுங்கள் இந்த அசத்தல் ஸ்மார்ட்போன் 

டீசர்களின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் ஒரு வளைந்த டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் கிரில், முதன்மை மைக்ரோஃபோன் துளை மற்றும் கீழே ஒரு சிம் கார்டு ஸ்லாட்டுடன் வரலாம். இரண்டாவது மைக்ரோஃபோன் துளை, IR பிளாஸ்டர் மற்றும் மற்றொரு ஸ்பீக்கர் கிரில்லர் இந்த போனின் மேல் பகுதியில் காணப்படுகிறது.

Xiaomi Civi 27 செப்டம்பர் திங்கள் அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று Xiaomi அறிவித்துள்ளது. வெளியீட்டு நிகழ்வு சீனாவில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும், இந்திய நேரப்படி இந்த போன் காலை 11:30 மணிக்கு வெளியிடப்படும்.

ALSO READ: Vivo X70 Pro+ விரைவில் வெளியீடு; முழு விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News