சென்னை IPL-ல் இடமாற்றம் கிடையாது-கிரிக்கெட் சங்கம் திட்ட வட்டம்!!

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்களுக்கு தமிழக கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Last Updated : Apr 8, 2018, 05:22 PM IST
சென்னை IPL-ல் இடமாற்றம் கிடையாது-கிரிக்கெட் சங்கம் திட்ட வட்டம்!! title=

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்களுக்கு தமிழக கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தடை செய்ய வேண்டும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். மீறி நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஐ.பி.எல். போட்டி நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் தொடங்கியது. சென்னையில் வரும் 10 ஆம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில், சென்னையில் வரும் 10-ஆம் தேதி நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியை கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகின.

ஆனாலும், இந்த செய்தியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை ஐபிஎல்-ஐ மாற்ற எந்த திட்டமும் இல்லை என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மறுப்பு தெரிவித்துள்ளது.

Trending News