Instagram-மில் புகைப்படங்களை Download செய்ய வேண்டுமா?

இன்ஸ்டாகிராம், தினமும் 500 மில்லியன் பயனாளிகளும் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக திகழ்கிறது.  

Last Updated : Apr 19, 2018, 01:15 PM IST
Instagram-மில் புகைப்படங்களை Download செய்ய வேண்டுமா? title=

இன்ஸ்டாகிராம், தினமும் 500 மில்லியன் பயனாளிகளும் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இருப்பினும் இந்த செயலியில் பயனாளிகளுக்கு ஒருசில குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. 

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டும் புகைப்படங்கள் டவுன்லோடு செய்ய முடியாமல் இருந்தது. 

இது வாடிக்கைக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. என்னெனில், மற்ற சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் டவுன்லோடு செய்யும் வசதி செய்து தரப்பபட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது, இன்ஸாகிராமில் பதிவு செய்யப்படும் புகைப்படங்களை டவுன்லோடு ஒரு வழி கிடைத்துள்ளது.

இதன் மூலம், எளிதில் நீங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டவுன்லோடு செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

இன்ஸ்டாகிராம் புகைப்படங்-களை டவுன்லோடு செய்ய....!

கூகுள் பிளே ஸ்டோர் சென்று 'ஃபாஸ்ட் சேஃப்' என்ற செயலியை உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 

இந்த செயலி டவுன்லோடு செய்யப்படும்போது புகைப்படங்கள் உள்பட மற்றவைகளை டவுன்லோடு செய்து கொள்ளும் அனுமதியை உங்களிடம் கேட்கும்.

அடுத்தபடியாக, இந்த செயலியை ஹோம் ஸ்க்ரீனில் வைத்து ஒரு சுவிட்ச் மூலம் பின்னர் டர்ன் ஆன் செய்து கொள்ள வேண்டும். 

சுவிட்ச் ஆன செய்தவுடன் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள புகைப்படங்களை டவுண்ட்லோடு செய்ய ஒருசில குறிப்புகளை இந்த செயலி உங்களுக்கு தரும்.

இதன் மூலம், எளிதில் நீங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டவுன்லோடு செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

Trending News