ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி வியட்நாமில் ஹோசிமின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இறுதி போட்டியில் தென்கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மி மற்றும் மேரிகோம் மோதினார்கள். இந்த போட்டியில் மேரிகோம் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் பதக்கம் பெற்றதை அடுத்து மேரிகோம் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா முதன் முறையாக விளையாடி 85 ஆண்டுகள் ஆகின்றது. 1932 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடியது.
1932 தொடங்கி இதுவரை இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஐசிசியின் அனைத்து விதமான கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் விக்கெட் கீப்பருமான மிஸ்டர் கூல் தோனி, தனது 300_வது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடினார்.
நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 300_வது ஒருநாள் போட்டியில் தோனி விளையாடினார். இந்த போட்டியில் 49 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருடைய சாதனைகளை பார்ப்போம்:-
> 73 இன்னிங்ஸ்களில் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
ஆவின் பாலின் கொள்முதல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டில் தெரிவித்துள்ளதாவது
"ஆவின் வரலாற்றில், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, தரமான பாலுக்கு தகுந்த விலை உரிய நேரத்தில் கொடுக்கப்பட்டு வருவதால், தற்போது 22.08.2017 அன்று அதிகபட்சமாக 31.84 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, ஆவின் சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியில் பூனம் ராவ்த் சிறப்பாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும், இன்றையப் போட்டியில் உலக பெண்கள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை மித்தாலி ராஜ் நிகழ்த்தி உள்ளார்.
மகளிர் கிரிக்கெட் அணிக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இந்திய அணி, ஆஸ்திரேலியா அணி மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.
பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ வெறும் 7 நாட்களிலேயே எட்டியுள்ளது.
ஏப்ரல் 28-ம் தேதி 4 மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி 2’. மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் “பாகுபலி 2”. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி ரிலீஸாகிறது.
இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் இந்திய அளவில் பல சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில் “பாகுபலி 2” இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை. இதுவா ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.