மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வால், கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி அளவீடாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு எத்தகைய பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்திவிடக் கூடாது என்று அஞ்சினோமா, அத்தகைய பாதிப்புகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் கல்வி என்பது திறமை சார்ந்தது என்ற நிலை மாறி பணம் சார்ந்தது என்ற நிலை உருவாகியுள்ளது.
ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஆண்டு தோறும் நுழைவுத்தேர்வு (ஜேஇஇ) நடத்தப்படுகிறது. பிரதான தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டாக நடத்தப்படும் இத்தேர்வில், பிரதான தேர்வை ஆன்லைன் மூலமும் எழுதுவதற்கான விருப்பத்தேர்வை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஐஐடி மற்றும் என்ஐடி-களில் சேர தகுதி அளிக்கும் அட்வான்ஸ்டு தேர்வையும் 2018 ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்த ஐஐடி முடிவு செய்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 28-ம் தேதி இந்திய அளவில், டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்புர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 700 மாணவர் சேர்க்கையிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் மொத்தம் 4,905 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி, 700 பேரை இறுதியாக தேர்வு செய்து, எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.