பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுதிய பாட்டாளி சொந்தங்களே நூல் வெளியீட்டு விழா 14.10.2017 சனிக்கிழமை காலை10.30 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை இராஜரத்தினம் அரங்கில் நடைபெறுகிறது.
பா.ம.க. தலைமை நிலையச் செய்தி மருத்துவர் அய்யா எழுதிய ‘பாட்டாளி சொந்தங்களே!’ நூல் வெளியீட்டு விழா!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கல்கி வார இதழில் ‘ பாட்டாளி சொந்தங்களே!’ என்ற தலைப்பில் எழுதிய தன் வரலாற்றுத் தொடர் தொகுக்கப்பட்டு, அதே தலைப்பில் நூலாக வெளியிடப்படவுள்ளது.
நீட் தேர்வின் நோக்கம் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளை பறிப்பது தான் என்பதை நிரூபிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
ஆசிரியர் நாளான இன்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், ஆசிரியர் பெருமக்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் கூறியதாவது:
மாணவர்களின் ஏற்றத்திற்கான ஏணியாக திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவினியோகத் திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழக சட்டப் பேரவை ஜனநாயகத்தையும், அவை மரபுகளையும் குழி தோண்டி புதைக்கும் வகையிலான எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு இருக்கிறது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் நேற்று ஒரே நாளில் 5 துறைகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கிறார். பேரவை ஜனநாயகத்தையும், அவை மரபுகளையும் குழி தோண்டி புதைக்கும் வகையிலான முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ஆட்சியில் நீடிக்கும் தகுதியை பினாமி எடப்பாடி அரசு இழந்து விட்டது. மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை ஆளும் கட்சியான அதிமுகவில் திடீர் திடீரென ஏற்படும் திருப்பங்களும், அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் நாடகங்களும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த திருப்பங்களும், நாடகங்களும் ஆளும்கட்சியினர் பயனடைவதற்கானதாக உள்ளனவே தவிர மக்களுக்கு நன்பை பயப்பதாக இல்லை.
மாடுகள் விற்பனை தடையை குறித்து எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசை, அடிமை அரசாக மாறும் பினாமி அரசு என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் மத்திய அரசின் அத்துமீறலைக் கண்டித்து தமிழக அரசு இதுவரை குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள மின்துறை அமைச்சர் மணியை அம்மாநில முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் பெண்ணை இழிவுபடுத்திய அவரை கேரளா அரசு தண்டிக்காமல் பாதுகாப்பது வருத்தமளிக்கிறது பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- '
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.