‘பாட்டாளி சொந்தங்களே!’ நூல் வெளியீட்டு விழா : வருகிற14-ம் தேதி

Last Updated : Oct 9, 2017, 12:49 PM IST
‘பாட்டாளி சொந்தங்களே!’ நூல் வெளியீட்டு விழா : வருகிற14-ம் தேதி title=

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுதிய பாட்டாளி சொந்தங்களே நூல் வெளியீட்டு விழா 14.10.2017 சனிக்கிழமை காலை10.30 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை இராஜரத்தினம் அரங்கில் நடைபெறுகிறது.

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி மருத்துவர் அய்யா எழுதிய ‘பாட்டாளி சொந்தங்களே!’ நூல் வெளியீட்டு விழா!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கல்கி வார இதழில் ‘ பாட்டாளி சொந்தங்களே!’ என்ற தலைப்பில் எழுதிய தன் வரலாற்றுத் தொடர் தொகுக்கப்பட்டு, அதே தலைப்பில் நூலாக வெளியிடப்படவுள்ளது. 

இந்த நூல் வெளியீட்டு விழா 14.10.2017 சனிக்கிழமை காலை10.30 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை இராஜரத்தினம் அரங்கில் நடைபெறுகிறது.

நூல் வெளியிட்டு விழாவுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் அ.கி. மூர்த்தி வரவேற்புரையாற்றுகிறார். பவித்ரா மதுரம் ரவி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகிறார். 

திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் க.பழனித்துரை ‘பாட்டாளி சொந்தங்களே!’ நூலை வெளியிட, எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான மாலன் பெற்றுக் கொள்கிறார். 

மூத்த பத்திரிகையாளர் கல்கி பிரியன் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சிறப்புரையாற்றவுள்ளார். 

நிறைவாக நூலாசிரியரும், பா.ம.க. நிறுவனருமான மருத்துவர் இராமதாசு நிறைவுரையாற்றவுள்ளார். சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்புச் செயலாளர் மு.ஜெயராமன் நன்றி தெரிவிக்கிறார். 

கவிஞர் ஜெயபாஸ்கரன் விழாவை தொகுத்து வழங்குகிறார்.

பாட்டாளி சொந்தங்களே நூல் கல்கி வார இதழில் 18.11.2012 முதல் 28.07.2013 வரை 34 வாரங்கள் வெளிவந்த தொடரின் தொகுப்பு ஆகும். 

இதில் மருத்துவர் அய்யா அவர்கள் அவரது திண்ணைப்பள்ளிக் காலம் முதல் இன்று வரையிலான வாழ்க்கை அனுபவங்களை சுவையாக தொகுத்து வழங்கியுள்ளார். 

மருத்துவர் அய்யா அவர்கள் குறித்து இதுவரை வெளிவராத ஏராளமான தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நூலை சென்னை திருவான்மியூரில் உள்ள வழுதி வெளீயீட்டகம் வெளியிடுகிறது.

Trending News