இந்திய மற்றும் சீன நாட்டில் இருந்து பிரேசில் (Brazil) வர விரும்பினால், அதற்கு விசா (Visa) தேவையில்லை என அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ (Jair Bolsonaro) அறிவித்துள்ளார்.
தீபாவளி பரிசாக, பாகிஸ்தான் மக்களுக்கு சிறப்பு பரிசினை அளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் விரைவில் அனுமதி அளிக்கப்படும். தீபாவளியின் சிறப்பு பரிசாக, இந்தியா வர விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு விரைவில் விசாக்கள் வழங்கப்படும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுளாளர்.
பிரதமர் மோடி சீனாவில் இருந்து மூன்று நாள் அரசு பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை இன்று சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இந்தியா - மியான்மர் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் தடை விதித்து அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் இந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் தூதரக ரீதியிலான ‘ராஜ்ய விசா’ மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றபடி தனி நபர்களுக்கு விசா வழங்கப்படாது என்று குறிப்பிட்டார். ஆனால் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.