சென்னை உத்தண்டியில் விதிமுறைகளை மீறி வீடு கட்டியதாக நடிகர் கமல்ஹாசனுக்கு சிஎம்டிஏ நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார்.
சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கேரள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல் அமைச்சர் பிரனாயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல் ஹாசான் தனது டிவிட்டரில் கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் பிரனாயி விஜயனின் நடவடிக்கை மூலம் பெரியாரின் கனவு நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமலின் டிவிட்:-
தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் இன்று சென்னையில் காலமானார். 86 வயதான அசோகமித்திரன் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். தியாகராஜன் என்பது இவரது இயற்பெயர். 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்தராபாத் நகரில் பிறந்தவர். பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து குடியமர்ந்தார்.
1996-ம் ஆண்டு தனது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 18-வது அட்சக்கோடு, ஆகாசத் தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.