தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடத்தில் கலக்கும் கொடி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கயுள்ளார்.
தற்போது 'கொடி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்ப்பு பெற்றது.
டிரைலர்:
தனுஷ், த்ரிஷா மற்றும் இன்னும் பலர் நடிக்க துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கொடி'. இசை சந்தோஷ் நாராயணன்.
முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
தற்போது 'கொடி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
பர்ஸ்ட் லுக் வீடியோ:-
தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 22-ல் தொடரி படம் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தொடரி. சில காரணகளால் தாமதமாகி வந்தது. தற்போது தணிக்கைக்கு படத்தை அனுப்பினார்கள். இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட வெளியீட்டை அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 22-ம் தேதி தொடரி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமிபத்தில் ரஜினி நடித்த கபாலி படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார்.
பா.ரஞ்சித் அடுத்து வேறு சில முன்னணி ஹீரோக்களின் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் இருந்து இதற்க்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தனுஷ் தயாரிப்பில் உருவான படம் அம்மா கணக்கு. தற்போது இப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளன.
அஸ்வினி ஐயர் திவாரி இந்த படத்தை இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி இன்னும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அம்மா கணக்கு ஜூன் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகி உள்ள படம் "தொடரி"
இப்படத்தின் கதை முழுக்க ரயில் பின்னணி கொண்டது. இமான் இசையமைத்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, கருணாகரன், ஹரிஷ் உத்தமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.
தற்போது படத்தின் டிரைலர் வெளியிடபட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.