ஐபோன் முதல் சாம்சங் வரை... உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் எவை...

உலகில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலை கவுண்டர் பாயிண்ட் ரெசர்ச் நிறுவனம் (Counterpoint Research) வெளியிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 4, 2024, 01:35 PM IST
  • பட்டியலில் உள்ள 10 போன்களில் 5 ஸ்மார்ட்போன்கள் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள்.
  • உலகில் அதிகம் விற்பனையாகும் 10 ஸ்மார்ட்போன்கள் எவை?
  • சியோமியின் ரெட்மீ போனும் உலகில் அதிகம் விற்பனையாகும் போன்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐபோன் முதல் சாம்சங் வரை... உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் எவை... title=

ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல காலம் ஆகி விட்டது. கடந்த 80-90 ஆண்டுகளைப் போல தொலைபேசி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இல்லாமல், காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கும் வரை அனைத்து பணிகளுக்கும் ஸ்மார்ட்போன் தேவைப்படுகிறது. இன்றைய உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன. அந்த அளவிற்கு அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. 

ஸ்மார்போன் சந்தை மிகவும் வலுவாக உள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனங்களும், வாடிக்கையாளர்களை கவர போட்டி போட்டுக் கொண்டு, தினம் புதுப் புது மாடல்களையும், புதிய அம்சம் நிறைந்த சிறந்த போன்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், உலகில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலை கவுண்டர் பாயிண்ட் ரெசர்ச் நிறுவனம் (Counterpoint Research) வெளியிட்டுள்ளது. 

உலகில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 ஸ்மார்ட்போன்கள்

ஆப்பிளின் ஐபோன் 15 இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உலகில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக (Smartphones) உள்ளது. இதற்கு அடுத்தபடியாக iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max உள்ளது. 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 14 கூட இந்த பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. 

பட்டியலில் உள்ள 10 போன்களில் 5 ஸ்மார்ட்போன்கள் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள்

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் சாம்சங்கின் 5 போன்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், Galaxy A வகையில் வரும் Samsung Galaxy A15 4G, Samsung Galaxy A15 5G, Samsung Galaxy A05 மற்றும் Samsung Galaxy A35 போன்ற 4 ஃபோன்கள் அடங்கும். Samsung Galaxy S24 இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிகம் விற்பனையான Galaxy S தொடர் போனாக உள்ளது.

மேலும் படிக்க | பிஎஸ்என்எல் வழங்கும் தடாலடி சேவை... 500+ சேனல்களும் பல ஓடிடிகளும் - இது இருந்தால் மட்டும் போதும்!

சியோமியின் ரெட்மீ ஃபோன் 

ஆப்பிள் மற்றும் சாம்சங் உடன், Xiaomi நிறுவனத்தின் Redmi 13C போனும் உலகில் அதிகம் விற்பனையாகும் போன்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ. 10,000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகம் விற்பனையாகும் 10 ஸ்மார்ட்போன்கள்

1. ஆப்பிள் ஐபோன் 15

2. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

3. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ

4. சாம்சங் கேலக்ஸி A15 4G

5. சாம்சங் கேலக்ஸி A15 5G

6. சாம்சங் கேலக்ஸி A05

7. ரெட்மீ 13C 4G

8. சாம்சங் கேலக்ஸி A35

9. ஐபோன் 14

10. சாம்சங் கேலக்ஸி S24

மேலும் படிக்க | Tech Tips: இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.... ஸ்மார்போன் கேமிரா காலியாகிவிடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News