இந்த வங்கி மலிவான கடனை அளிக்கிறது: யாரெல்லாம் பயனடைய முடியும்?

COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் தடையின்றி கடன்களை வழங்க இந்த வங்கி கடன் உத்தரவாத திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 03:43 PM IST
  • சிறு மற்றும் நடுத்தர அளவிலான மைக்ரோ நிதி நிறுவனங்களுக்கு கடன்கள் மீது உத்தரவாதம் வழங்கப்படும்.
  • இந்த வசதி மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள், வேளாண் வணிகங்கள் மற்றும் வணிகச் சந்தைகளுக்கு தேவையான நிதி நன்மைகள் கிடைக்கும்.
  • இந்த திட்டத்தின் கீழ், 28 மாநிலங்களில் 650 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் குடும்பங்களுக்கு உதவி கிடைக்கும்.
இந்த வங்கி மலிவான கடனை அளிக்கிறது: யாரெல்லாம் பயனடைய முடியும்? title=

ஒரு தொழிலைத் தொடங்க மலிவான கடனை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (Nabard) விண்ணப்பிக்கலாம். COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் தடையின்றி கடன்களை வழங்க இந்த வங்கி கடன் உத்தரவாத (Credit guarantee) திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

Nabard-ன் படி, இந்த திட்டம் NBFC- மைக்ரோ நிதி நிறுவனங்களுக்கு நிதி மற்றும் சிறிய உத்தரவாத திட்டத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், சிறு மற்றும் நடுத்தர அளவிலான மைக்ரோ நிதி நிறுவனங்களுக்கு (MFI) கடன்கள் மீது ஓரளவிற்கான உத்தரவாதம் வழங்கப்படும்.

இந்த மாத தொடக்கத்தில் vivriti Capital மற்றும் Ujjivan Small Finance Bank ஆகியவற்றுடன் சேர்ந்து, Nabard, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முயற்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ், மைக்ரோ நிறுவனங்கள் மற்றும் EWS குடும்பங்களுக்கு நிதி வழங்கப்படும். Nabard சேர்மன் ஜி.ஆர் சிந்தாலா, இந்த COVID-19 தொற்று சூழலில், பகுதி கடன் உத்தரவாத வசதி மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள், வேளாண் வணிகங்கள் மற்றும் வணிகச் சந்தைகளுக்கு தேவையான நிதி நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: வீட்டுக் கடன் வாங்க இந்த COVID காலம் சரியான காலமா? ஆம் எங்கிறார்கள் நிபுணர்கள்!!

ஆரம்ப கட்டத்தில், இதன் மூலம், ரூ .2,500 கோடி வரை நிதியளிக்கப்படும். பின்னர் அது மேலும் அதிகரிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், 28 மாநிலங்களில் 650 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் குடும்பங்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், முதலில் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் விதமாக, Nabard மற்றும் Vivriti, Ujjivan Small Finance Bank உடன் கூட்டுசேர்ந்துள்ளனர். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, Nabard, சிறப்பு நிதி வசதிகளின் கீழ் மைக்ரோ நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு சுமார் 2,000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

ALSO READ: BSNL பயனர்களுக்கு ₹.399 புதிய அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்!!

Trending News