மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் இன்று காலை திடீரென காவலர் ஒருவர் பங்கேற்றார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். காவலர் போலீஸ் சீருடையிலேயே போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு கிட்டத்தட்ட முழு அளவில் ஆதரவு காணப்பட்டது. தமிழகம் கிட்டத்தட்ட முழு அளவில் முடங்கிப் போனது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தமிகத்தின் பெரும்பாலான கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஓரிரு நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் விஓஎஸ் பகுதியில் தீவிர போராட்டம் நடத்த்கி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இதில் கலந்து கொண்டார்.
ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் விஓஎஸ் பகுதியில் போராட்டம் நடத்த்கி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசி அவசர சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக அன்புமணி எம்.பி, டெல்லி சென்றிருந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் என பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர் விஜய்சேதுபதி பங்கேற்றுள்ளார். கல்லறை தோட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர் விஜய்சேதுபதி பங்கேற்றுள்ளார்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை போராட்டம் ஓயக் கூடாது என்று மாணவர்களை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அப்போது ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வந்தார். அவர் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது அவர் :-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என பல்வேறு இடங்களிலும் தொடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி நடத்தி வரும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இப்போராட்டம் குறித்து நட்சத்திர சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில்:-
"எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக போராடுகின்றனர். தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.